யாழில் கறுப்பு
பட்டியணிந்த கண்டன போராட்டம்!
யாழ்ப்பாணத்தில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்க
நீதி கோரியும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
அரசு கூற
வேண்டும் என
வலியுறுத்தியும் கறுப்பு பட்டியணிந்த கண்டன போராட்டம்
இன்றைய தினம்
இடம்பெற்றுள்ளது.
யாழ்.
மாவட்ட செயலகம்
முன்பாக இன்று
காலை 10.30 மணியளவில், முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட
அழைப்பிற்கு அமைய ஒன்று கூடியவர்கள் இந்த
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது
வாய்களை கறுப்பு
துனிகளில் கட்டியவாறும்
கைகளில் எதிர்ப்பு
பதாதைகளை ஏந்தியவாறும்
தீபங்களை கொழுத்தியும்
இவர்கள் இந்த
எதிர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின்
இறையான்மையும் எனது மகனும் ஒன்றா? மக்களின்
பிரதிநிதிகளே எமது மக்களின் கண்ணீர் உங்களுக்கு
வெறும் தண்ணீரா?
ஐயா ஜனாதிபதியே
சந்தேகப்படும் இடங்களை பார்க்க அனுமதிப்பேன் என
கூறியது வெறும்
நாடகமா, போன்ற
கோசங்கள் இதன்போது
எழுப்பப்பட்டன.
மேலும்,
ஏமாற்றாதே ஏமாற்றாதே
காணாமல் போனவர்களின்
உறவுகளை ஏமாற்றாதே,
ஆள் விழுங்கி
அரசு காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி சொல்,
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன
நடந்தது போன்ற
எதிர்ப்பு வாசகங்கள்
எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டக்காரர்கள்
தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment