ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ : 12 பேர் பலி

இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றியதை முதலில் யாரும் கவனிக்கவில்லை. இதனால் மளமளவென தீ பரவியது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 12 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top