உங்களுக்கு
தெரியுமா?
1871 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முதலாவது குடிசன
மதிப்பீட்டில்
இலங்கையில் 1871 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி எடுக்கப்பட்ட
முதலாவது குடிசன மதிப்பீட்டில் கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய சனத் தொகை கொண்ட
கிராமமாக அக்கரைப்பற்று கிராமம் இருந்துள்ளது.இக்கிராமத்தில் அன்று 932
குடும்பங்களும் 698 வீடுகளும் இருந்துள்ளன.
அன்று ஆகக் குறைந்த சனத் தொகை கிராமமாக
இறக்காமம் கிராமம்
இருந்துள்ளது. இக்கிராமத்தில் அன்று 70 குடும்பங்களும் 42 வீடுகளும் இருந்துள்ளன.
சாய்ந்தமருதில் அன்று 842 குடும்பங்களும்
598 வீடுகளும் இருந்துள்ளன.
சாய்ந்தமருதுக்கு ஒரு மிகப் பெரிய
பாரம்பரியம் உண்டு. 1602 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2 ஆம் திகதி இந்த நாட்டில் ஒல்லாந்தரது
கப்பல் ஒன்றின் தளபதியான ஜொரிஸ் வான் ஸ்பில் பேர்கன் குழுவினர் முதலாவது காலடி வைத்து
இறங்கியது சாய்ந்தமருது கடற்கரையிலாகும்.
இதற்கு ஆவணங்கள் மட்டுமல்ல அவர்களோடு
அந்த நேரம் வருகை தந்த புகைப்பட பிடிப்பாளர் போன்ற மாதிரியுள்ள வரைபடக்காரன் டி.பிரைன்
அதனை படமாகவே சித்தரித்திருக்கிறார்.
சாய்ந்தமருதிலிருந்து அவர்கள் சம்மாந்துறை
போய் அரைவாசிப் பேர் சம்மாந்துறையில் தங்கியிருக்க மீதிப் பேர் கண்டிக்குப் போய் முதலாம்
விமலதர்மசூரியனைச் சந்தித்து அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து சாய்ந்தமருதிலிருந்துதான்
அவர்கள் சென்றுள்ளார்கள். இப்பயணத்தின்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தான் சந்தித்த
சோனகர் (Mooren) மற்றும் துலுக்கர் (Tureken) பற்றியும்
தனது நாட்குறிப்பேட்டில் விபரித்துள்ளான். (Journal of spilbergen 1602 – Translation by
K.D.Paranavitane – 1997 page 23)
பிரித்தானியர்கள் எமது இலங்கை நாட்டைக் கைப்பற்றிய போது அவர்களுக்கு எதிராகப்
போரிட்டு கண்டிய மன்னனை ஆதரித்த குற்றத்திற்காக கல்முனை,மருதமுனை, சம்மந்துறை ஆகிய
ஊர்களைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களை எதிரிகளாக வர்த்தமானி மூலம் பிரித்தானியர்கள்
பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
கல்முனையைச் சேர்ந்த மீராஉஸன் அபூபக்கர், உமர்லெவ்வை உதுமாலெவ்வை.
மருதமுனையைச் சேர்ந்த அனீஸ்லெவ்வை
சம்மாந்துறையைச் சேர்ந்த. அபூபக்கர்
இஸ்ஸாக் முகாந்திரம்
இந்த நால்வரும் எமது நாட்டு தேசப்பற்றாளர்களாக இருந்தும் பிரித்தானியர்களை
எதிர்த்த காரணத்திற்காக அவர்கள் தேசத் துரோகிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால்.
அவர்கள் தேசப் பக்தர்கள்
0 comments:
Post a Comment