வெள்ளை மாளிகைக்குள் நுழையப் போகும்
அமெரிக்காவைச் சேராத மெலானியா டிரம்ப்


200 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைக்கவிருக்கும் அந்தஸ்து





MELANIA TRUMP TO BE FIRST FLOTUS BORN OUTSIDE US IN ALMOST 200 YEARS


அமெரிக்காவைச் சேராத டிரம்ப் மனைவி மெலானியா டிரம்ப் 200 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெற உள்ளார்.
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று, வெள்ளை மாளிகைக்குள் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  நுழைய உள்ளார். இவருடன் இவரின் குடும்பமும் வெள்ளை மாளிகைக்குள் செல்லவுள்ளனர்.
தனால், டிரம்பின் மூன்றாவது மனைவியான மெலானியா டிரம்பிற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க உள்ளது.
46 வயதான மெலானியா டிரம்ப் கடந்த 1970 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் நாடான யுகோஸ்லாவியாவில் பிறந்தார்.
லூசியா லண்டனில் ஆங்கிலேய தாய்க்கும், அமெரிக்கதந்தைக்கும் பிறந்தவர்.
அதன் பின் மொடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் தன்னுடைய 16 வயதில் மொடலிங் உலகிக்குற்குள் வந்தார். ஐந்து மொழிகளிலும் பேசும் திறமை கொண்ட இவர் 1998 ஆம் ஆண்டு டிரம்பை நியூயார்க்கில் சந்தித்துள்ளார்.

அதன் பின்னர் இருவருக்கும் 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இவருக்கு 2006 ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகனாவதற்கான க்ரீன் கார்டு வழங்கப்பட்டது.
அமெரிக்க குடியுரிமை கிடைத்த பின்னர், இந்த பூலோகத்தில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது எனக்கு என்று மெலானியா தெரிவித்து இருந்தார். இவர்களுக்கு தற்போது 10 வயதில் பரோன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெற உள்ளார்.
இதற்கு முன்னர் (1825-29) ஆண்டில் அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதியான ஜான் கியூன்சி ஆடம்சின் மனைவி லுயசா ஆடம்ஸ் அவர்களே வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைத்த வெளிநாட்டு பெண்மணி.

இதனையடுத்து கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னர் டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top