நித்திரையில் ஆழ்ந்த மக்கள் பிரநிதிகள்!
நாடாளுமன்றத்தில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள்!!
நாடாளுமன்றத்தில்
நேற்று நிதி
அமைச்சர் ரவி
கருணாநாயக்கவினால்
வரவுசெலவுத்திட்டம்
முன்வைக்கப்பட்டது. குறித்த வரவுசெலவுத்திட்டத்தை
நிதி அமைச்சர்
நீண்ட நேரமாக
வாசித்தார்.
இதன்போது
நாடாளுமன்றத்தில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளன.
முக்கிய
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில்
நித்திரை செய்துள்ளனர்.
இதன்படி,
அமைச்சர் நிமல்
சிறிபால டி
சில்வா, அமைச்சர்
எஸ்.பி.திஸாநாயக்க, ஹிருணிக்கா,
மஹிந்தானந்த அலுத்கமகே, மேலும் சிலர் நித்திரை
செய்துள்ளனர்.
நிதி
அமைச்சின் வரவுசெலவுத்திட்டத்தை
சிலர் உற்று
நோக்கினாலும், சிலர் அவர்களை மறந்து நித்திரையில்
ஆழ்ந்து விட்டார்கள்.
மேலும்,
ரவி கருணாநாயக்க,
சில சொற்களை
உச்சரிப்பதற்குச் சிரமப்பட்டமையாலும், சில சொற்களைத் தவறாக
உச்சரித்தமையாலும் சபையில் சற்று
நகைச்சுவை ஏற்பட்டுள்ளது.
வரவு
- செலவுத் திட்ட
முன்மொழிவுகளை முன்வைத்து, சிங்களம் மற்றும் ஆங்கிலம்
ஆகிய இரண்டு
மொழிகளையும் கலந்து உரையாற்றிய நிதியமைச்சர் ரவி
கருணாநாயக்க, சிற்சில சொற்களை உச்சரிப்பதற்குச் சிரமப்பட்டமையாலும், சில சொற்களைத் தவறாக
உச்சரித்தமையாலும் சபையில் சிரிப்பொலி
எழுந்தது.
ஆங்கிலத்தில்
உரையாற்றும் போது, எதிரணி உறுப்பினர்கள் மிகவும்
அவதானமாகச் செவி சாய்த்து, ‘பூகம்பாவ’ (பூதியதிர்ச்சி)
என்று கூற,
அவையிலிருந்த ஆளும் எதிரணியினர் ‘கெக்’ என்று
சிரித்து விட்டனர். இதற்கிடையே
ஒன்றிணைந்த எதிரணியினர், 2017ஆம் ஆண்டுக்கான வரவு
- செலவுத்திட்ட யோசனைகள் அடங்கிய புத்தகத்தைக் கோரி
நின்றனர். அதன்போது,
அமைச்சர் ராஜித்த
சேனாரத்ன, “மஹிந்தவின் காலத்தில் இவ்வாறு கேட்டீர்களா?”
என, உரத்தக்
குரலில் கேட்டுவிட்டார்.
0 comments:
Post a Comment