ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்தார் டொனால்டு டிரம்ப்
Obama
Hosts Trump at White House for First Meeting After Election
டிரம்ப் வெற்றி பெற்றது
அமெரிக்காவின் வெற்றி. ஆட்சி நிர்வாகத்தை சுமூகமான முறையில் ஒப்படைப்பதே எனது தலையாய
கடமை.
- ஜனாதிபதி ஒபாமா
ஜனாதிபதி
ஒபாமாவை சந்தித்தது தனக்கு கிடைத்த கெளரவம்
-
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், ஜனாதிபதி பாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ம் திகதி(நவ.,8) நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு, ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் வெள்ளை மாளிகைக்கு வர டிரம்புக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று, வெள்ளை மாளிகை சென்ற டிரம்ப் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின் ஒபாமா தெரிவித்துள்ளதாவது: டிரம்ப் வெற்றி பெற்றது அமெரிக்காவின் வெற்றி. ஆட்சி நிர்வாகத்தை சுமூகமான முறையில் ஒப்படைப்பதே எனது தலையாய கடமை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தெரிவிக்கையில், ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்தது தனக்கு கிடைத்த கெளரவம் எனக்கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment