நிந்தவூரில் இரவுவேளைகளில் நடமாடுவது

ஆவாக்குழுவா? கிறீஸ் மனிதனா?

மக்கள் பீதி!

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுவதாக அறிவிக்கப்படுகின்றது.

இரவுவேளைகளில் வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத கோஷ்டியினரின் செயற்பாடே இவ்வச்சத்திற்கு காரணமெனக்கூறப்படுகின்றது.

ஒரு சில இடங்களைத்தவிர, மற்றைய இடங்களில் ஒன்றையுமே திருடாமல் பயத்தை ஏற்படுத்திச்சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஆவாக்குழு காரணமா அல்லது கடந்த ஆட்சி காலத்தில் நடமாடவிடப்பட்ட கிறீஸ் மனிதன் போன்ற மற்றுமொரு குழுவினர் காரணமா? என பொதுமக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

ஒருசில வீடுகளில் தங்கச்சங்கிலி, பணம் போன்றவை திருடப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

நிந்தவூர் 11ஆம் பிரிவிலுள்ள றிஸ்வான் என்பவரின் வீட்டின் இரவு 8மணியளவில் கூரைமேல் ஏறி பிளாஸ்ரிக் சீலையிலான அண்டர் சீற்றை வாளால் துளையிட்ட நபரை அவ்வீட்டுப் பெண்மணிகண்டு ஓலமிட, குறித்த நபர் தப்பி ஓடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மழைநேரமாகையால் மக்கள் யாரும் வெளியேவரவில்லையாம்.

அதே பிரிவில் றிசாட் என்பவரின் வீட்டிலுள்ள யன்னலை நள்ளிரவு 11மணியளவில் அலவாங்கிட்டு பெயர்த்தெடுத்து உள்நுழைந்துள்ளனர். அங்கு வீட்டுக்காரர் விழித்தெழ அவர்கள் தப்பி ஓடியுள்ளனராம்.

பள்ளிவாசல்களில் இதுதொடர்பில் அறிவித்து வீதிகளிலும், வீடுகளிலும் மின்விளக்கை எரியவிடுமாறு கோரியுள்ளதுடன் பொலிசாரிடமும் குறித்த விடயம் தொடர்பில் கூறியுள்ளனர்.

எனினும் இரவு நேர இச்செயற்பாடு தொடர்ந்து வருகின்றமையால் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர்.
இதேவேளை, நிந்தவூர் பிரதேசத்தில் அன்மைக்காலமாக நடைபெற்றுவரும் களவு விடயமாகவும் ஊர் பாதுகாப்பு விடயமாகவும் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலமையில் கூட்டமொன்று கடந்த 29 ஆம் திகதி  நடைபெற்றது.
இக் கூட்த்திற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் மற்றும் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர், சம்மாந்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள் , ஊர் மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தையடுத்து நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் களவு மற்றும் இரவு வேளைகளில் வீடுகளின் கதவுகளை தட்டுதல், அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நிந்தவூர் கடலோரத்தில் நடமாடும் பொலிஸ் நிலையமொன்றும் நிறுவப்பட்டுள்ளமையும்  குறிப்படத்தக்கது.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் 29 ஆம் திகதி
இடம்பெற்ற  கூட்டம் (படங்கள்)









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top