இலங்கை முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக
அழிக்க போகின்றேன்!

ஞானசார தேரர் எச்சரிக்கை

இலங்கை முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழித்து மாபெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் எனப்படும் போதைப் பொருள் வர்த்தகர் நேற்று மாலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது இனவாதக் கருத்துக்கள் தொடர்பில் கிழக்கை மையமாகக் கொண்ட மூத்த முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரும், கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சியொன்றின் தலைவருமான இரண்டு அமைச்சர்கள் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கை காரணமாகவே டான் பிரியசாத் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் டான் பிரியசாத்தின் கைது நடவடிக்கை குறித்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையாக கொந்தளித்துள்ளார்.

நாளைய தினத்துக்குள் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அப்துர் ராசிக்கை கைது செய்யத் தவறும் பட்சத்தில் மாளிகாவத்தை தொடக்கம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அழித்து பெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்த உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்திடமும் , தற்போதைய அரசாங்கத்திடமும் அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்த போதும் இது வரை நடவடிக்கையெடுக்கப்படவில்லை.

இதனால் சட்டத்தை தாமே கையிலெடுக்க வேண்டிவந்துள்ளதாகவும் இதன்படி காட்டு சட்டத்தை கையிலெடுத்து போராட்டங்களை நடத்த வேண்டிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கம்பு தடிகள் கற்களையும் பயன்படுத்தலாம். அத்துடன் எங்களில் 100 , 200 பேரும் உயிரிழக்கலாம் அதற்கும் தயாராகவே இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொது பல சேனாவை சேர்ந்த டான் பிரியசாத் என்ற நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே நேற்று ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.


இந்தியாவுக்கு தம்பதிவவுக்கு யாத்திரை சென்றிருந்த ஞானசார தேரர் நேற்று மாலை நாடு திருமிபியிருந்த நிலையில் அவர் விமான நிலையத்தில் வைத்தும் மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் வைத்தும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று மாலை தொடக்கம் நாடெங்கிலும் இருந்து சிங்கள இளைஞர்கள் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா தலைமையகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

நேற்றையதினம் முன்னிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அவ்வாறாக ஏராளமான வெளி மாவட்ட இளைஞர்கள் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.


ஏதேனும் அசம்பாவிதம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவர்கள் கொழும்புக்கு வருகை தந்திருப்பதாக அஞ்சப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top