நீர்க் கட்டணங்களை
உயர்த்துவதற்கு
நீர் வழங்கல்,
வடிகாலமைப்புச் சபை தீர்மானம்
இது
தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று
பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நீர்க்
கட்டணங்களும், மாதாந்த சேவைக் கட்டணங்கள் என்பன
இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.
சில
பிரிவுகளில் சுமார் 30 வீதம் முதல் 50 வீதம்
வரையில் கட்டணங்கள்
உயர்த்தப்படவுள்ளன.
சமுர்த்தி
பெறுனர்கள் தவிர்ந்த ஏனைய பாவனையாளர்கள் 0 முதல்
5 அலகுகளுக்கான கட்டணம் அலகு ஒன்றுக்கு 8 ரூபாவிலிருந்து
16 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதுடன் மாதாந்த சேவைக்
கட்டணம் 50 ரூபாவிலிருந்து 250 ரூபாவாகவும்
உயர்த்தப்படவுள்ளது.
16 அலகு
முதல் 20 அலகு
வரையிலான அலகுகளுக்கான
கட்டணங்கள் 40 ரூபாவிலிருந்து 52 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதுடன்
80 ரூபாவாக காணப்பட்ட மாதாந்த சேவைக் கட்டணம்
400 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
பாடசாலைகள்
மற்றும் மத
வழிபாட்டுத் தலங்களுக்கான 0 முதல் 5 அலகுகளுக்கான மாதாந்த
சேவைக் கட்டணம்
50 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அலகு
ஒன்றுக்கான கட்டணம் 6 ரூபாவிலிருந்து 7
ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
0 comments:
Post a Comment