ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எச்.ஏ.பஷீர் அவர்களின்
சேவைக்கு கெளரவம்
கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் பொன்னாடை போர்த்தி
கெளரவிப்பு
ஓய்வு
பெற்ற அதிபர்
அல்-ஹாஜ்
ஏ.எச்.ஏ.பஷீர்
அவர்களுக்கு அரசியல் பிரமுகர்களும் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த
பலரும் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னங்களை
வழங்கியும் அவரை பாராட்டி கெளரவித்தார்கள்.
கல்முனை
மஹ்மூத் மகளிர்
கல்லூரியின் முன்னாள் அதிபர் அல்-ஹாஜ்
ஏ.எச்.ஏ.பஷீர்
அவர்களின் 26 வருட அதிபர் சேவையைக் கெளரவிக்கும்
பாராட்டு விழா
இன்று 14 ஆம்
திகதி திங்கள்கிழமை
கல்லூரியின் எம்.சி.ஏ.ஹமீது
அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.
ஓய்வு
பெற்ற அதிபரின்
சேவையைக் கெளரவிக்கும்
இப் பாராட்டு
விழாவில் முஸ்லிம்
காங்கிரஸ் தேசிய
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
பிரதி அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரிஸ்,
கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மாகாண
சபை உறுப்பினர்
கே.எம்.
அப்துல் ரஸ்ஸாக்
(ஜவாத்) உட்பட
கல்வி அதிகாரிகள்,
அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என
பெரும் எண்ணிக்கையானோர்
கலந்து ஓய்வு
பெற்ற அதிபரை
பாராட்டிக் கெளரவித்தனர்.
இவ்வைபவத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்
நஸீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸ்ஸாக் (ஜவாத்) ஆகியோர் உட்பட
பலர் உரை நிகழ்த்தினார்கள்.
ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் ஏ.எச்.ஏ.பஷீர் அவர்களுக்கு கல்முனைப்
பிரதேசத்தைச் சேர்ந்த பல பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தினார்கள்.
ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் ஏ.எச்.ஏ.பஷீர் தனது சேவைக்கு வழங்கப்பட்ட
கெளரவிப்பை ஏற்று பதிலுரை நிகழ்த்தினார்.
0 comments:
Post a Comment