அதிர்ச்சியில் ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்காவின்
ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு
218 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை
தழுவியுள்ளார் ஹிலாரி கிளிண்டன்.
அமெரிக்காவின்
முதல் பெண் ஜனாதிபதி என்ற வரலாற்றுச் சாதனை
அவரது கையை விட்டு நழுவியுள்ளது.
அமெரிக்க
மக்கள் ஹிலாரியை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை
விட குடியரசுக்கட்சிக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாமே
என்று யோசித்ததன் விளைவுதான் டிரம்ப் வெற்றி பெற
காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்க
ஜனாதிபதி வேட்பளராக உயர்ந்த ஹிலாரியின் வாழ்க்கை,
சர்ச்சைகளையும் சாதனைகளையும் கொண்டது.
ஹிலாரியின்
அம்மா பெயர் டோரத்தி எம்மா,
அப்பா ஹக் எல்ஸ்வர்த் ரோத்தம்
பென்சில்வேனியாவில் சிறு ஜவுளி வணிகர்.
மத்தியதரக்
குடும்பத்தில் பிறந்த ஹிலாரி கிளிண்டன்,
புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியான வெல்லெஸ்லி
கல்லூரியில் படித்தார். பின்னர்
யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
படிக்கும்
காலத்திலேயே அரசியலில் ஆர்வம் காட்டிய ஹிலாரி
குடியரசுக் கட்சியால் ஈர்க்கப்பட்டு கட்சியில் பிரச்சாரம் செய்து வந்தார். மார்ட்டின்
லூதர் கிங் படுகொலைக்குப் பின்னர்
ஜனநாயகக் கட்சிக்கு மாறினார் ஹிலாரி கிளிண்டன்.
1968இல் ஜனநாயக
கட்சியில் இணைந்தார். 1973ல் யேல் சட்டக்
கல்லூரியில் பட்டம்
பெற்றார் ஹிலாரி.
பில்க்
கிளிண்டனை யேல் பல்கலைக்கழகத்தில் சந்தித்திருக்கிறார்
என்றாலும், 1975ஆம் ஆண்டு கிளிண்டனை
திருமணம் செய்துகொண்டனர்.
பில்
கிளிண்டன் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்ற
பிறகு கூட ஹிலாரி தனது
வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார்.
அன்றைய
தினத்தில் மிகவும் புகழ் பெற்ற
வழக்கறிஞர்களில் அவரும் ஒருவர். பல
பன்னாட்டு பெருநிறுவனங்களுக்காக வாதாடியிருக்கிறார். குழந்தைகளுக்காகவும் ஆதரவில்லாதவர்களுக்காகவும் அவர் எப்போதும் குரல்
கொடுத்துக் கொண்டிருந்தார்.
பில்
கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த
1993 முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான
கால கட்டத்தில் ஜனாதிபதியின் மனைவியாகவும், நாட்டின்
முதல் குடிமகளாகவும் இருந்து பெண்கள் உரிமைக்காக
பேசி வந்தார். இவரது மருத்துவ காப்பீடு
குறித்த பிரச்சாரங்கள் பேசப்பட்டவை.
பில்
கிளிண்டனின் பாலியல் விவகாரம் வெளிச்சத்துக்கு
வந்தபோது, தனது கணவருக்கு
முழு ஆதரவு அளித்தவர் ஹிலாரி.
1999ஆம் ஆண்டு
ஹிலாரி கிளிண்டனின் அரசியல் வாழ்வு தொடங்கியது.
பில்
கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியில் இருந்த
போதே 2000ஆம் ஆண்டு பல
விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நியூயார்க் செனட்டராக தேர்வானார் ஹிலாரி.
அமெரிக்காவின்
முதல் பெண்மணியாக இருப்பவர் தேர்தலில் வெற்றிபெறுவது அதுதான் முதல் தடவை.
தொடர்ந்து 2006ஆம் ஆண்டும் நியூயார்க்
செனட்டராக அவர் தேர்வானார்.
ஜனாதிபதி
வேட்பாளராக போட்டி அரசியலில் வெகுவாக
முன்னேறிய ஹிலாரி, 2008இல் அமெரிக்க ஜனாதிபதி
வேட்பாளராக ஆகுவதற்காக கட்சியில் ஒபாமா போட்டியிட்டபோது, அவருக்கு
எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
வேட்பாளராக
தேர்வாகவில்லை என்றாலும் 2009ஆம் ஆண்டு நாட்டின்
முக்கிய பதவிகளில் ஒன்றான வெளியுறவுத் துறை
அமைச்சர் பதவி ஹிலாரிக்கு கிடைத்தது.
ஒபாமாவின்
நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராக 2013 வரை பணியாற்றினார். வெளியுறவு
அமைச்சர் 2009 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான
கால கட்டம் ஹிலாரிக்கு பல
அரசியல் அனுபவங்களை அளித்தது.
இதற்கு
முன்பு வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி
வகித்தவர்களை விட ஹிலாரி கிளிண்டன்
அதிகமாக 112 நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.
அரபு
எழுச்சியின் போது அமெரிக்காவின் வெளியுறவுத்
துறை அமைச்சராக இருந்து தகுந்த நடவடிக்கைகளை
மேற்கொண்ட ஹிலாரி, லிபியாவில் 2011ஆம்
ஆண்டு அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு தலைமை
வகித்தார்.
அதுவே
அவரது பதவியை இழக்கவும் காரணமாக
அமைந்தது. 2013ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை
அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் பொது
நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற வண்ணமே இருந்த ஹிலாரி
, மனித உரிமைகளுக்காகவும் பெண் உரிமைக்காகவும் குரல்
கொடுப்பதை நிறுத்தவில்லை.
ஜனாதிபதி
வேட்பாளராக வெற்றி பெர்னி சாண்டர்ஸுக்கு
எதிராகப் போட்டியிட்டு ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கடந்த ஜூலை 26ஆல்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனநாயக
கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்கான களத்தில் தான் இறங்கப்போவதாக அறிவித்த
நிமிடத்தில் இருந்து குற்றச்சாட்டுகளும் விசாரணைகளும்
ஹிலாரியை தொடர்ந்தன.
அதில்
முக்கியமானது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த
போது முக்கியமான தகவல் பரிமாற்றங்களுக்கு தனிப்பட்ட
மின்னஞ்சலைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு முக்கியமானது.
ஜனநாயகக்
கட்சி வேட்பாளர் இதற்கான விசாரணையிலும் ஹிலாரி
ஆஜரானார். அவரது ஆயிரக்கணக்கான ஈமெயில்களும்
வெளியில் வந்தன.
தொடர்
முயற்சியின் காரணமாக ஜனநாயகக் கட்சியின்
ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தேவையான ஆதரவினைத் திரட்டிய
கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்ற இடத்தை எட்டிப்பிடித்தார்.
ஆனால்...
இறுதி தருணத்தில் 218 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை
தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு குடியரசு கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை ஹிலாரி கிளிண்டன் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment