ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பளம்:
டொனால்ட் டிரம்ப் அதிரடி

'I won't take even one dollar': Donald Trump has said he will NOT accept the $400,000 president's salary

அமெரிக்க ஜனாதிபதியா பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், எனது சம்பளமாக ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே வாங்குவேன். விடுமுறை எடுக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகிப்பவர்களுக்கு விடுமுறைக்கால ஓய்வுடன் கூடிய சம்பளம் மற்றும் ஆண்டு சம்பளமாக 4 லட்சம் டாலர்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 20-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

நாட்டின் ஜனாதிபதியாக நீங்கள் சம்பளம் வாங்குவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
 ‘இல்லை, நான் சம்பளம் வாங்கப் போவதில்லை. ஆனால், நமது நாட்டின் சட்டப்படி ஒரு டாலராவது சம்பளமாக பெற வேண்டும் என்றுள்ளது. எனவே, ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொள்வேன். ஆனால், அது (ஒரு டாலர்) என்னவென்றே எனக்கு தெரியாதுஎன கூறியுள்ளார்.

மற்ற ஜனாதிபதிகளைப்போல் ஓய்வுக்காக விடுமுறை எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு,

 ‘நமக்கு ஏராளமான பணிகள் உள்ளன. மக்களுக்காக அவற்றை நான் செய்ய வேண்டியுள்ளது. அதனால், பெரிய அளவிலான ஓய்வுக்காக விடுமுறை எடுக்கும் திட்டம் ஏதுமில்லைஎன்று அவர் பதிலளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top