காதலனுக்கு
அருகில் நின்ற குற்றத்திற்காக
இஸ்லாமிய
பெண்ணிற்கு கிடைத்த சவுக்கடி தண்டனை
இந்தோனேசியா நாட்டில் காதலனுக்கு மிக அருகில் நின்ற
குற்றத்திற்காக இஸ்லாமிய இளம்பெண் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள Banda Aceh என்ற மாகாணத்தில் தான் இச் சம்பவம்
நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் 20 வயதான இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் அவருடைய
காதலனுடன் வெளியில் சென்றபோது அவருக்கு அருகில் நின்று பேசியுள்ளார்.
இளம்பெண்ணின் இந்நடவடிக்கை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது
எனக் கூறி இளம்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து இளம்பெண் மற்றும் அவருடைய 21 வயதான காதலனை கைது செய்த பொலிஸார் Masjid
Al-Muttaqin என்ற மசூதிக்கு
முன்னிலையில் நேற்று சவுக்கடி தண்டனை கொடுத்துள்ளனர்.
பொது இடங்களில் திருமணம் ஆகாத நபர்கள் பொது இடங்களில்
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, தொடுவது உள்ளிட்ட செயல்களுக்கு இந்தோனேசியாவில் கடுமையான தண்டனை வழங்கப்படுவது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment