முஸ்லிம் சமூகம் மீது சூழ்ந்துள்ள
கருமேகங்களை அரசு அகற்ற வேண்டும்

முன்னாள் அமைச்சர் அஸ்வர் வேண்டுகோள்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)


இன்று முழு முஸ்லிம் சமுதாயத்தை அச்சம், பயங்கரவாதம் எனும் கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. இந்த கருமேகங்களை அகற்றுவது அரசாங்கத்தின் உடனடியான பாரிய பொறுப்பாகும் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான . எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தொடர்ச்சியாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றனநல்லாட்சி வந்த பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அட்டகாசத்தை முஸ்லிம்கள் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாத நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்நாட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதியையும் பிரதம அமைச்சரையும் நம்பி வாக்களித்தார்கள். நல்லாட்சியை உருவாக்கினார்கள். ஆகவே வாக்கைப் பெற்ற இவர்கள் மீது பாரிய பொறுப்பு இருக்கிறது. முஸ்லிம்களுடைய வணக்கஸ்தலங்களைப் பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவர் மாறி ஒருவராக வெளிநாட்டிலே இருக்கிறார்கள். பாவம் அப்பாவி முஸ்லிம்கள் ஜனாதிபதியும் பிரதமரும் சொன்னதை நம்பி மஹிந்தவுக்கு எதிராக சென்ற முறை வாக்களித்தார்கள். அந்த நேரத்திலே முழு முஸ்லிம் சமுதாயமும் பள்ளிவாசல்களில் குனூத் ஓதியது. அதன் பிரதி பலனை காணமுடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி எம்மிடம் கூறியள்ளார். ஆகவே மீண்டும் பள்ளிவாசல்கள் தோறும், வீடுகள் தோறும் நல்ஈமான் கொண்ட முஸ்லிம்கள் குனூத் ஓதி இறைவனிடத்திலே தங்களையும்தங்களுடைய உடமைகளையும், வீடு வாசல்களையும், கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும். நேற்று  முன்தினம் அதிகாலையில் நிகவெரட்டிய பெரிய பள்ளிவாசலில் ஐந்து பெற்றோல் குண்டுகள் வீசி பள்ளியை சேதப்படுத்தி  இருக்கிறார்கள். இதனையிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கு பொலிஸார் வந்த வாகனத்தின் இலக்கம் தெரியவில்லை என்று சாக்குப் போக்கு கூறாது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இது பற்றி பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் கே.எம். ஹமீதை தொடர்பு கொண்டு கேட்ட போது, பள்ளிவாசல் தினமும் 10 மணிக்கு மூடப்படுகிறது. 4 மணிக்குதான் திறக்கப்படுகிறது. இதற்கு இடையில்தான் இப்படியான நாசகார வேலைகளைச் செய்துள்ளார்கள். என்று தெரிவித்தார்.
நல்லாட்சி வந்த பிறகு முஸ்லிம் பள்ளிவாசல்களில் நாடு பூராகவும் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கிறது. இன்று வரையிலும் யாரையும் கண்டு பிடிக்கவில்லை. இது உள்ளிருந்து செய்கின்ற, முஸ்லிம்களுக்கு எதிரான, முஸ்லிம்களைக் கருவருக்கச் செய்கின்ற ஒரு சதித்திட்டமாஎன்பதை வினவ வேண்டிய நேரம் வந்தவிட்டது என்று நாம் நினைக்கின்றோம்ஏனெனில் வல்லரசு சியோனிச அமெரிக்கவாதிகளுடைய, ஐரோப்பிய நாடுகளுடைய அடிப்படைப் பொருளாதாரம் ஜீ.எஸ்.பி பிளஸ் பொருளாதார உறுதியை வேண்டுவதற்காக வேண்டி முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தையே அவர்கள் மாற்றச் சொல்வதன் மர்மம் என்ன? அப்படியென்றால் இந்த நாட்டிலே பௌத்தர்களுக்குரிய விவாகச் சட்டம், இந்துக்குரிய விவாகச்சட்டம் மற்றும் கிறிஸ்தவர்களுக்குரிய விவாகச் சட்டம் இருக்கின்றது. அவைகளை மாற்றுவதற்கு இவர்கள் சொல்லவில்லையா? அப்படியென்று சொன்னால், ஏன் சொல்லவில்லை? ஆகவே நாங்கள் ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டது போன்று சியோனிச வாதிகள்இஸ்ரவேலர்களை வளர்க்கக் கூடிய, போஷிக்கக் கூடிய, முஸ்லிம்களுக்கு அநியாயம் விளைவித்து, முஸ்லிம்களை பச்சை பச்சையாக கொன்று குவிக்கின்ற அந்த இஸ்ரவேலர்களை கட்டிக் காக்கும் சியோனிச வாதிகளுடைய அடிமட்ட நடவடிக்கைகள் சிதறுண்டு வந்து இலங்கையைத் தாக்கக் கூடிய பெரிய அபாயத்தை முஸ்லிம் சமுதாயம் எதிர் கொண்டு இருக்கின்றது.
எனவே மீண்டும் நாம் வலியுத்திக் கேட்பது வேறு யாரிடமும் அல்ல, முஸ்லிம்கள் யாரை நம்பி வாக்குத் தந்தார்களோ? அந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக அவர்கள் வெளிநாட்டில் இருந்தாவாவது முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனத் துவேசத்தை தடுப்பதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது முஸ்லிம் சமுதாயத்தை சுற்றி மூடக்கூடிய பய அச்ச இருள் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்த இருள் மேகத்தை களையக் கூடியது இந்த நல்லாட்சி என்று சொல்லக் கூடிய அரசாங்கத்தின் கடமையாகும்.

அதுமட்டுமல்ல, இது குறித்து முஸ்லிம் அமைச்சர்களும் அரச சார்பாக இருக்கின்ற, எந்த நேரமும் அரசாங்கத்துக்கு சார்பாக குரல் கொடுக்கின்ற ஊது குழலாக இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து  ஏனையவர்களையும் கூட்டிச் சென்று ஜனாதிபதியையும் பிரதமரையும் நேரில் சந்தித்து இதற்கு நிச்சயம் பரிகாரம் தேட வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் வேண்டுகோளாகும். என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top