ஆஸ்திரேலிய பிரதமருக்கு அந்நாட்டு பெண்ணான
அல்லிசன் பிரான்ஸ் எழுதியுள்ள உருக்கமான கடிதம்
My
surgeon the refugee: Woman's emotional plea to PM to reconsider migration law
changes
எனது அறுவை சிகிச்சை மருத்துவர், ஈராக்கில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்த அகதி என கடிதமொன்றை ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்க்கு அந்நாட்டு பெண்ணான அல்லிசன் பிரான்ஸ் எழுதியுள்ளார்.
மேலும் அந்தப் பெண் எழுதிய கடிதத்தில்,
அகதிகள் தொடர்பான தங்களுடைய சமீபத்திய அறிவிப்பினை நான் எதிர்க்கின்றேன். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் எனது காலை இழந்தேன்.
மருத்துவர் முன்ஜெத் அல் முடிரீசை பார்க்குவரை எனது வாழ்க்கையை சக்கர நாற்காலியில் மட்டுமே கழித்தேன். அவர் ஈராக்கிலிருந்து அகதியாக படகு வழியே ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர். ஆஸ்திரேலியாவில் Osseointegration
அறுவைச் சிகிச்சை செய்யக்கூடிய ஒரே எலும்பியல் மருத்துவர் அவர் மட்டும்தான்.
அவராலேயே இன்று நான் நடக்கிறேன். நமது நாட்டிற்கு அவர் பெரும் பங்களிப்பினை செய்திருக்கின்றார். தற்போது அகதிகள் பற்றிய கொள்கையில் கொண்டு வரக் கூடிய திருத்தங்கள் அந்த மருத்துவரை மனுஸ் தீவு அல்லது நவுரு தடுப்பு முகாம்களில் அடைக்கக் கூடும். எனினும், அகதிகள் சார்ந்த நிலைப்பாட்டினை ஆஸ்திரலிய பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல முயற்சிக்கும் அகதிகளுக்கு அந்நாட்டில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டம் தொடர்பான அறிவிப்பினை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் விடுத்தார். இது ஆஸ்திரேலிய அளவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் பல மனித உரிமை ஆர்வலர்கள் இச்சட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
மருத்துவர் முன்ஜெத் அல் முடிரீஸ் மனித உரிமை செயற்பாட்டாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment