தேர்தல் தோல்வி வேதனை அளிக்கிறது

தோல்வியால் ஏற்பட்ட வலி மறைவதற்கு நீண்ட காலம் ஆகும்.

ஹிலாரி கிளிண்டன்


Teary Hillary Clinton on US election defeat: 'This is painful and will be for a long time'
HILLARY Clinton has made an emotional first speech since losing to Donald Trump in the 2016 US election, apologising for losing and saying the pain of defeat would go on for a long time to come.
ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த தோல்வி வேதனை அளிக்கிறது என ஜனாதிபதி தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியா பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன் தினம் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழத்தி அமெரிக்க ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேசிய ஹிலாரி தெரிவித்துள்ளதாவது:
 அமெரிக்க ஜனாதிபதியா டிரம்ப் வெற்றி பெற்றதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தது வேதனை அளிக்கிறது. தோல்வியால் ஏற்பட்ட வலி மறைவதற்கு நீண்ட காலம் ஆகும்.
ஜனாதிபதியா வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு நாட்டின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தேன். நாட்டின் நலனுக்காக இணைந்து பணியாற்ற உள்ளதாக டிரம்ப்பிடம் தெரிவித்தேன். இவ்வாறு ஹிலாரி கூறியுள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top