ஆப்கானிஸ்தான் பெண் ஷார்பத் குலா
பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட்டார்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஷார்பத் குலா பெண்ணின் சிறைத்தண்டனை முடிந்ததும் அவர் ஆப்கானிஸ்தானுக்கு
நாடு கடத்தப்பட்டார்.
ஆப்கானிஸ்தானை
சேர்ந்த ஷார்பத் குலா (வயது
44) என்ற பெண், பாகிஸ்தானில் அகதியாக
வசித்து வந்தார். அவர் கடந்த 1985-ம்
ஆண்டு 12 வயதில் தனது பச்சை
நிற கண்களால், ‘நேஷனல் ஜியாகிராபிக்’ பத்திரிகையின்
அட்டையை அலங்கரித்து உலக அளவில் பிரபலமானார்.
ஆனாலும்
அவர் போலியான ஆவணங்கள் மூலம்
அடையாள அட்டை பெற்று பாகிஸ்தானில்
சட்டவிரோதமாக வசித்து வந்ததாக கடந்த
மாதம் கைது செய்யப்பட்டார். அவர்
மீது விசாரணை நடத்திய பாகிஸ்தான் நீதிமன்றம்,
அவருக்கு 15 நாள் சிறைத்தண்டனையும், அபராதமும்
விதித்ததோடு சிறைத்தண்டனை முடிந்ததும் அவரை நாடு கடத்துவும்
உத்தரவிட்டது.
இருப்பினும்
கைபர் பக்துங்வா மாகாண அரசு மனிதாபிமானத்தின்
அடிப்படையில் அவரை நாடு கடத்துவதில்லை
எனவும், அவர் தொடர்ந்து பாகிஸ்தானில்
வசிக்கலாம் எனவும் அறிவித்தது.
ஆனால்
அதனை ஏற்கமறுத்த ஷார்பத் குலா, தனது
தாய்நாட்டிற்கு செல்லவேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
அதன்படி அவரது சிறைத்தண்டனை முடிந்ததும்
நேற்று முன்தினம் அவர் ஆப்கானிஸ்தானுக்கு நாடு
கடத்தப்பட்டார்.
பாகிஸ்தான்-
ஆப்கானிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியான டோர்காம்
எல்லையில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஷார்பத் குலா ஒப்படைக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment