பூகோள போட்டித்
திறன் பட்டியலில்
ஒரே ஆண்டில் 14 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை
2017–20182017-18ஆம் ஆண்டுக்கான
பூகோள போட்டித்
திறன் Global Competitiveness Report அறிக்கையில், இலங்கை 85 ஆவது
இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
உலக
பொருளாதார அமைப்பு
ஆண்டு தோறும்
வெளியிடும், பூகோள போட்டித் திறன் பட்டியலில்,
137 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
2017-18ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை 85 ஆவது இடத்தில் உள்ளது. இதில்
சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள்
முதல் மூன்று
இடங்களைப் பிடித்துள்ளன.
2010-11ஆம் ஆண்டில், 62 ஆவது இடத்தில்
இருந்த இலங்கை
2015-16ஆம் ஆண்டில் 68 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
2016-17 ஆம் ஆண்டில் 71 ஆவது இடத்தில்
இருந்த இலங்கை
இந்த ஆண்டு,
மேலும் 14 இடங்கள்
பின்தள்ளப்பட்டு, 85 ஆவது இடத்தில்
உள்ளது.
குவாட்டமாலா,
பூட்டான், சைபீரியா,
ருவாண்டா போன்ற
நாடுகள் இலங்கையை விட முன்னிலையில்
உள்ளன.
இலங்கையின் பின்னடைவுக்கு
திறமையற்ற அரசாங்க
நிர்வாகம், தேசிய வேலைப்படையில் மோசமாக பணி
நெறிமுறை, கொள்கை
உறுதியின்மை போன்றன முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகிறது.
0 comments:
Post a Comment