400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது

இடதுகை சுழற்பந்து வீச்சாளர்

உலக சாதனை படைத்தார் சுழல் மன்னன் ரங்கன ஹேரத்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் சுழல் மன்னன் ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலகசாதனையை படைத்தார்.
39 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 84  டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 153 இன்னிங்ஸ்களில் விளையாடி 23, 835 பந்துதுகளை வீசி 11, 128 ஓட்டங்களை எதிரணி வீரர்களுக்காக கொடுத்து 400 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ரங்கன ஹேரத்திற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின் டானியல் வெற்றேரி 362 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் 188 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 ஆவது இடத்திலுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரங்கன ஹேரத்  40 ஓவர்கள் பந்து வீசி 93 ஓட்டங்களைக் கொடுத்து 12 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
2 ஆவது இன்னிங்ஸில் 21.4 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களைக் கொடுத்து  4 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top