2 லட்சம் மெட்ரிக் டொன் அரிசியை உடனடியாக
இறக்குமதி செய்ய நடவடிக்கை
வெளிநாடுகளிலிருந்து
2 லட்சம் மெட்ரிக்
டொன் அரிசியை உடனடியாக
இறக்குமதி செய்ய
அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக
சர்வதேச ரீதியாக
கேள்விப் பத்திரங்கள்
கோரப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர்
ரிஷாட் பதியூதீன்
தெரிவித்துள்ளார்.
இந்தியா,
பாக்கிஸ்தான், மியன்மார், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து,
மற்றும் பங்களாதேஸ்
நாடுகளில் இருந்து
அரிசியை இறக்குமதி
செய்ய தீர்மானித்துள்ளதாக
அமைச்சர் கூறினார்
நாட்டரிசி
90000 மெட்ரிக்டொன், சம்பா அரிசி
60 ஆயிரம் மெட்ரிக்
டொன், வெளளை
பச்சையரிசி 50 மெட்ரிக் டொன் ஆகியவற்றை இறக்குமதி
செய்ய கேள்விப்
பத்திரம் கோரப்பட்டுள்ளன.
முதல்
தொகை அரிசி
ஒரு லட்சம்
மெட்ரிக் டொன்
எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி இறக்குமதி
செய்யப்படும்.
எஞ்சிய
ஒரு லட்சம்
மெட்ரிக் டொன்
அரிசி டிசம்பர்
மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
0 comments:
Post a Comment