இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில்
முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?
30 வருடங்களுக்கு முன்னர்
மர்ஹும் அஷ்ரப் அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு
இதுவரை விடை தராத தமிழ் தலைமைத்துவங்கள்!
அமைச்சர் ஹக்கீம் பச்சைக்கொடி காட்டுவது ஏன்?
முஸ்லிம் சிவில் சமூகத்தினர் கேள்வி
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்
எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமுதாயமும் சுய மரியாதையுள்ள சமூகம்தான் எங்களுக்கும் தமிழ், சிங்கள சமூகத்தவர்களைப்
போன்று அபிலாஷைகள் உள்ளன. எமது குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் எதிர்கால நிலைப்பாட்டை நிர்ணயிப்பதற்கு முஸ்லிம்களாகிய
நாங்களும் உரிமை பெற்றவர்கள். என்ற அடிப்படையில் தமிழ்த் தலைவர்களிடம் உங்களுடைய நிர்வாகத்தில்
முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? என்ற 30 வருடங்களுக்கு முன் எழுப்பிய கேள்விக்கு அவர்களால்
சரியான விடை இதுவரை வழங்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஒருமித்த நிலைப்பட்டை
இதுவரை உறுதியான முறையில் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் இல்லை.
இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்கும்
நாம் தயாராக இருக்கின்றோம் வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் சகோதரர்கள்
எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். இந்த இணைப்பு தொடர்பில் எமக்குள் இணக்கப்பாடு ஏற்படவேண்டும்
என்று ஒரு தனி மனிதனுக்கான பதவியை மாத்திரம் ஆசை காட்டி முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாமல்
பதவி ஆசையோடு இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்
பேசி வருவது வேடிக்கையான விடயமாக இருப்பதுடன் முஸ்லிம் சமூகத்தை ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனும் ,நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அரசோடு சார்ந்து
போகின்றார்கள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து தமிழ் மக்களின்
செல்வாக்கைப் பெற்றுக் கொண்டுவரும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் கிழக்கில்
முஸ்லிம்கள் வாழ்வதையே சரியாக அறியாதவராக உள்ளார். முஸ்லிம்கள் விடயத்தில் அவர் எந்தக்
கருத்தையும் தெரிவிப்பதாக இல்லை. அவரின் தலைமையில் உள்ள வட மாகாண சபையின் நிர்வாகத்தின்
கீழ் வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் குடியேற்ற விடயத்தில் கடினப் போக்கோடு அவர் செயல்படுவதை
நாம் நிதர்சனமாகப் பார்க்கின்றோம்.
இப்படியான ஒரு நிலையில் வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை இணைப்பது சம்பந்தமாக முஸ்லிம் மக்களின் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் கட்சி ஒன்று தனி அலகு என்ற நிபந்தனையுடன் இணப்பதற்கு பச்சைக்கொடியைக் காட்டுகின்றது. இது கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் விருப்பத்திற்கு மாறாக தலைமைத்துவம் தனது சொந்த இஸ்டத்திற்கு காட்டும் பச்சைக் கொடி என சிவில் சமூகத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மக்களின் அபிலாஷைகளை உரிய இடங்களில் எடுத்து முன் வைக்க வேண்டியவர்களாகத்தான்
எந்த தலைவர்களும் கடமையாற்ற வேண்டும். மக்களின் குரலாக இருக்க வேண்டும் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் மக்களின் நிலைப்பாட்டையும் அபிலாஷைகளையும் உரிய இடத்தில் உரிய சந்தர்ப்பத்தில் எடுத்து வைப்பதுதான் கடமையே தவிர மக்களின் சார்பில் அவர்களாகவே முடிவெடுப்பதல்ல. . மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்ட காரணத்தால் மக்களின் மூளையாக அரசியல்வாதிகள் செயற்பட முயற்சிக்க்க் கூடாது.
இன்று முஸ்லிம் தலைவர்கள் சமூகத்தின் அங்கீகாரம் இல்லாமல் திடீர் திடீரென தமது கருத்துக்களை வெளியிடுகிறார்கள். சில விடயங்களில் சொந்த சிந்தனையே இல்லாமல் சிலரின் ஏஜண்ட்கள் போல செயலாற்றுகிறார்கள்.
இந்த இணைப்பு முஸ்லிம் சமூகத்தின் சனத் தொகை விகிதாசாரத்தை அதாவது
பிரிந்திருந்தால் முஸ்லிகளின் விகிதாசாரம் 43 சத வீதமாக இருக்கும். இணைந்தால் முஸ்லிம்களின்
விகிதாசாரம் 17 சத வீதமாக மாறிவிடும், வடக்கும் கிழக்கும் இணையும்போது முஸ்லிம்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக
ஆக்கப்படுகின்றார்கள். அடிமையாக்கப்படுகின்ற சந்தர்ப்பமும் ஏற்பட்டு விடும்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு பகரமாக எவருமே சரியாகப்
புரிந்திராத வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கும்
முஸ்லிம் மக்களின் குடியிருப்புப் பிரதேசங்கள், அவர்களின் வயல் நிலங்கள் மற்றும்
ஏனைய வியாபாரத் தொழில் இருப்பிடங்கள் என்பன போன்றவற்றை எவ்வாறு வேறுபடுத்தப் போகின்றார்கள்,
எந்த அடிப்படையில் இவைகளுக்கு எல்லை போட்டு வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் இவைகள்
தான் அடங்கும் தனி அலகுக்குள் இவைகள்தான அடங்கும் என்று ஒரு முடிவுக்கு எமது
தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் வரப்போகின்றார்கள்.விடை காண முடியாத இந்த
திட்டத்திற்கு தனி அலகு என்று வெறுமனே
வாயால் பேசிகொண்டிருக்கின்றார்கள். அரசியல்
இலாபத்திற்காக காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்முனையில் “இக்பால் சன சமூக நிலையத்தால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்
அவர்கள் தெரிவித்த சில கருத்துக்களை இங்கு தருகின்றோம்.
முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி விளக்காத
தமிழ் பிரதிநிதிகளை நாம் எவ்வாறு நம்பி இருப்பது?
அஷ்ரப் கேள்வி
தமிழ் மக்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டால், தமிழ் மக்களிடையே முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பதற்கு தமிழ் தலைவர்கள் உறுதியான விளக்கம் ஒன்றையும் இன்னும் கூறவில்லை. இப்படியான நிலையில் நாம் எவ்வாறு தமிழ் பிரதிநிதிகளை நம்பியிருப்பது.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்முனையில் “இக்பால் சன சமூக நிலையத்தால்" ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்..
அன்று மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் மேலும் பேசுகையில்,
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் நியாயபூர்வமான ஒன்று என்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், தமிழ் மொழி பேசுவதன் காரணமாக முஸ்லிம் மக்களும் தமிழர்களே என்னும் கூற்றை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
முஸ்லிம் சமுதாயமும் சுய மரியாதையுள்ள சமூகம்தான் எங்களுக்கும் தமிழ், சிங்கள சமூகத்தவர்களைப் போன்று அபிலாஷைகள் உள்ளன. எமது எதிர்கால மக்களின் நிலைப்பாட்டை நிர்ணயிப்பதற்கு முஸ்லிம்களாகிய நாங்களும் உரிமை பெற்றவர்கள்.
எந்த ஒரு தீர்வும் தமிழ் மக்களைப் பாதித்து விடக்கூடாது என இந்திய அரசு தனது கவனத்தை தமிழ் மக்களுக்காகச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதைப் போன்று சிங்கள சமூகத்தைப் பாதித்து விடுமா என இலங்கை அரசும் தனது கவனத்தைச் செலுத்துகின்றது.
ஆனால், மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்களின் எதிர்காலத்தைப்பற்றி பேசுபவர்கள் யார்?
எது எப்படி இருப்பினும் எம்மைப் பொறுத்த வரையில் நிரந்தர தீர்வுக்கான உயர் மட்டப்பேச்சு வார்த்தைகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் அவசியம் இடம்பெறல் வேண்டும்.
எந்த தீர்வு மூலமாகவும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பலம் பிரிக்கப்படக்கூடாது.இவ்வாறு மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்முனையில் தெரிவித்திருந்தார்.
(ஆதாரம்: தினபதி 1987.01.31 ஆம் திகதி சனிக்கிழமை)
0 comments:
Post a Comment