அகதிகளாகத் துரத்தப்பட்டு 30
வருடங்களுக்குப்பின்
சொந்தப் பிரதேசங்களுக்கு திரும்பி வரும்போது
மக்கள் வாழாத அந்தப் பிரதேசங்கள்
காடுகளாகக் காட்சி தருகின்றது.
இங்குள்ள மதகுருமார்களுக்கு இதன் யதார்த்தம் தெரியும்.
ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில்
அமைச்சர் றிஷாட்
வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய பாரியபொறுப்பு ஜனாதிபதியாக தங்களுக்கு உள்ளது என்பதை மிகக் கெளரவத்துடன் இந்த இடத்தில்
கூறிக்கொள்ள விரும்புகின்றேன்
வட மாகாணத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு 30 வருடங்கள் சகல இன மக்களும்
நிம்மதி இழந்த மக்களாகவே இருந்திருக்கிறார்கள். இந்த மாகாணத்தில் அகதிகளாக இருந்த
மக்களின் பல பிரதேசங்கள், அதாவது அகதிகளாகத் துரத்தப்பட்டு 30 வருடங்களுக்குப்பின்
சொந்தப் பிரதேசங்களுக்கு திரும்பி வரும்போது மக்கள் வாழாத அந்தப் பிரதேசங்கள் காடுகளாகக்
காட்சி தருகின்றது. அதனை வைத்து ஒரு பெரிய நாடகம் இந்த நாட்டில்
அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின், மாவட்ட ரீதியிலான ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை "நிலமெஹவெர"
தேசிய வேலைத்திட்டம் இன்று 21 ஆம் திகதி வவுனியா சைவப்பிரகாசா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இவ்வாறு
தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
இங்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்ந்து பேசுகையில் மேலும்
கூறியதாவது,
இந்த நாட்டின் பொறுப்பு வாய்ந்த தலைவர் என்ற வகையில் ஒரு பாரிய பொறுப்பு
ஜனாதிபதியாக தங்களுக்கு உள்ளது என்பதை மிகக் கெளரவத்துடன் இந்த இடத்தில்
கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இதன் உண்மைத் தன்மையை இந்நாட்டுக்கும் இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற
சிங்கள மக்களுக்கும் நீங்கள் உங்களுடையை
தலைமையில் புரிய வைக்க வேண்டும்.
உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கத்தை எல்லோரும்
ஒன்று சேர்ந்து இம்மாவட்டத்தில் ஏற்று அங்கீகரித்தார்கள். இங்குள்ள அத்தனை
மதகுருமார்களுக்கும் இதன் யதார்த்தம் தெரியும்.
எங்கே இருந்து வருகின்ற ஒரு மதகுரு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பொய்களைக்
கூறுவதுடன் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டுகின்ற
பொய்யான தகவல்களைக்யும் கூறி கலவரத்தைத் தூண்டுகின்றார்.
எமது இந்த இலங்கை நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றார்கள்.
எமது நாடு சுதந்திரம் கிடைத்தற்குப் பிறகு முப்பது வருடங்களுக்கு சுதந்திரத்தை
இழந்தவர்கள் போல. நாட்டில் எமது மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
எமது நாட்டின் எதிர்காலம் , மக்களின் எதிர்காலம் கருதி இவர்கள் ஒற்றுமையாக
வாழவேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும்
பொருளாதாரத்தில் மேம்படல் வேண்டும் எல்லோரின் குழந்தைகளும் சிறப்பான
கல்வியைப் பெறல் வேண்டும் என்பதற்காக இந்த அரசு மிக உக்கிரமாக உழைத்து வருகின்றது
என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஜானாதிபதியாகிய உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கத்தால் இம்மாவட்டத்திற்கு நிறைய
ஒதுக்கீடுகள் கிடைத்திருக்கிறது. எல்லாத் துறைகளுக்கும் நிதிகள்
கிடைத்திருக்கின்றன. அதற்காக இப்பிரதேச மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றி கூறக்
கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான வஜ்ர அபேவர்தன, கயந்த கருணாதிலக, சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment