"நிலமெஹவெர" தேசிய வேலைத்திட்டம்

உள்நாட்டலுவல்கள் அமைச்சின், மாவட்ட ரீதியிலான ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை "நிலமெஹவெர" தேசிய வேலைத்திட்டம் இன்று (21) வவுனியா சைவப்பிரகாசா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், வஜ்ர அபேவர்தன, கயந்த கருணாதிலக, சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top