அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு..!
குற்றவாளி குறித்து எஃப்.பி.ஐ விளக்கம்
59 பேர் உயிரிழப்பு. 527 பேர் காயம்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபருக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில், இசை நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது. அந்த இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சுமார் 25 ஆயிரம் பேர் வரை அந்த இடத்தில் கூடியிருந்தனர். அப்போது, கேசினாவுக்கு அருகிலுள்ள மண்டலே பே ஓட்டலின் 32-வது மாடியிலிருந்து மர்ம நபர் ஒருவன் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். அவன், தொடர்ச்சியாக சராமாரியாகச் சுட்டான்.
அந்த துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் உயிரிழந்தனர். 527 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவன், ஸ்டீபன் பெடாக். அவனுக்கு வயது 64. மண்டலே பே ஓட்டலின், பெடாக் தங்கியிருந்த அறையை காவல்துறையினர் சோதனையிட்டபோது, அங்கிருந்த 16 துப்பாக்கிகளும் 10 சூட்கேஸ்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றவாளி எனத் தெரிவித்த எஃப்.பி.ஐ, 'காவல்துறையினர் அவனைப் பிடிப்பதற்கு முன்னதாகவே, அவன் தற்கொலைசெய்துகொண்டான். குற்றவாளிக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதனை எஃ.பி.ஐ மறுத்துள்ளது.
0 comments:
Post a Comment