சாய்ந்தமருது வைத்திய சாலையை தரம் உயர்த்தல்

தொடர்பாக பிரதி சுகாதார அமைச்சர்

கௌரவ பைஸல் காசிம் அவர்கள்

தெரிவித்த கருத்துக்கள் முரண்பாடானவை.

- சாய்ந்தமருது சூறா சபை



சாய்ந்தமருது வைத்திய சாலையை தரம் உயர்த்தல் தொடர்பாக பிரதி சுகாதார அமைச்சர் கௌரவ பைஸல் காசிம் அவர்கள் தெரிவித்ததாக வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் தொடர்பாக சாய்ந்தமருது சூறா சபை பின் வரும் விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
1. 1952 ல் சாய்ந்தமருதில் மத்திய மருந்தகம் கட்டித் திறக்கப்பட்டது. ம் மருந்தகம் 1950 களில் ப்பிரந்தியத்திலேயே மிகப் பிரபலமாக விளங்கியது. பின்னர் 1979 ல் ங்கு மகப்பேற்று மருத்துவ மனை ஸ்தாபிக்கப்பட்டது. கலவரச் சூழலிலும் ப்பிராந்தியத்திலே ங்குதான் அதிக மகப்பேறு டம்பெற்றது. 1982 ல் ங்கு நோயாளர் விடுதிகள் கட்டப்பட்டு வ்வைத்திய சாலை சுற்றயற்கூறாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர் 1990 களில் மாவட்ட வைத்திய சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. வ்வளவு அபிவிருத்தியும் கல்முனை வைத்தியசாலையிலிருந்து மூன்று கி.மீ. தொலைவுக்குள் ருந்த சாய்ந்தமருதில் நடைபெற்றது.
2.சாய்ந்தமருது வைத்திய சாலையின் வளர்ச்சியையும் சேவையினையும் கண்ணுற்ற கல்முனைக்குடி மக்கள் தங்கள் ஊரிலும் ஒரு மகப்பேற்று மருத்துவமனை வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். தன் பயனாக 1988 ல் கல்முனைக்குடியில் ஒரு மகப்பேற்று மருத்துவ மனை திறக்கப்பட்து (தற்போதைய அஷ;ரப் வைத்திய சாலை).ம் மருத்துவமனை சாய்ந்தமருது வைத்திய சாலைக்கும் கல்முனை வைத்திய சாலைக்கும் மிகக் கிட்டிய துரத்தில் ருந்தபோதும் யாரும் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
3. சுனாமியின் பின்னர் சாய்ந்தமருது வைத்திய சாலையை மீளக்கடடுவதற்கான ஏற்பாடுகள் நடை பெற்றபோது சாய்ந்தமருதில் வைத்திய சாலை அவசியமில்லை என்ற கோசம் எழும்பியது. அத்துடன் புதிய கட்டுமானங்களைத் தடுப்பதற்குப் பல சதி முயற்சிகள் நடைபெற்றன. அதே வேளை, சேதமான சாய்ந்தமருது வைத்தியசாலையின் கட்டடங்களை சுகாதார திணைக்களத்தின் வேறு தேவைகளுக்கு பாவிக்கவும் வளவில் வேறு கட்டடங்கள் கட்டுவதிலும்; முனைப்புக் காட்டப்பட்டது. வ்வேளை அமைச்சர் .எல்.எம்.அதாவுல்லா அவர்களின் பங்களிப்பின் மூலமே தற்போதைய வைத்திய சாலை கட்டப்பட்டது.
4. சாய்ந்தமருது வைத்தியசாலைக்கான தற்போதைய கட்டடம் கட்டப்பட்டதன் பின்னர்  இதனைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு அரசியல் தலைமைகளும் சுகாதார திணைக்களமும் ஒத்துழைக்கவில்லை. மாறாக ங்குள்ள வளங்களைப் பங்கு போடுவதிலேயே கண்ணாயிருந்தனர்;.
5. ந்நிலையில் வ்வைத்திய சாலையை ஆதார வைத்தியசாலையாகத் தரம் உயர்த்த வைத்திய சாலை அபிவிருத்தி சபை முயற்சியெடுத்து மாகாண அமைச்சின் அனுமதியும் பெற்றது. ஆயினும் துவரை அமுல் நடத்தப்படவில்லை. குறைந்த பட்சம் பிரதேச வைத்தியசாலை தரம்-1க்காவது உயர்த்தப்படவில்லை என்பது வேதனையான விடயம். அதே வேளை தனுடன் அனுமதிக்கப்பட்ட பல வைத்திய சாலைகள் தற்போது ஆதார வைத்திய சாலைகளாக யங்குகின்றன.
6. சாய்ந்தமருது வைத்திய சாலையின் அபிவிருத்திக்கான மாற்று ஒழுங்காக வ்வைத்தியசாலையில் கண்,சிறுவர்,மகப்பேறு,விபத்து,முறிவு போன்ற ஒரு விஷேட வைத்தியப்பிரிவை ஏற்படுத்துவது தொடர்பாக வைத்திய சாலை அபிவிருத்தி சபையும் ஊரின பல முக்கியஸ்தர்களும் ,ணக்கமாக ருந்தனர். ஆயினும் ,தனை வேறு வைத்திய சாலையின் ஒரு உப பிரிவாக மாற்றி ,ங்குள்ள வளங்களை பங்கு போடுவதில் மட்டும் அக்கறை காட்டும் செயற்பாடுகளுக்கு உடன்பட வ்வூர் மக்கள் ஆயத்தம் ல்லை

7.எனவே எதிர்காலத்தில் சாய்ந்தமருது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய உளப்பூர்வமாக விரும்பும் அரசியல் தலைமைகள் மேற்படி விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top