ஐக்கிய
நாடுகள் சபைக்கு 72 வருடங்கள் பூர்த்தி
ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு
இன்றுடன் 72 வருடங்கள்
பூர்த்தியாகின்றன.
இந்த சர்வதேச அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் என்ற பெயரை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்லின் ரூஸ்வெல்ட் சூட்டியிருந்தார்.
சபையின் முதலாவது கூட்டம் 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி இடம்பெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு
ஆண்டும் ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய
நாடுகள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பிரிட்டன் ராஜதந்திரி க்ளெட்வின் ஜேப் முதலாவது ஐநா
செயலாளராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை பத்துப் பேர் அந்தப் பதவியை
வகித்துள்ளார்கள். போர்த்துக்கல்லைச் சேர்ந்த அந்தோனியோ குத்தரெஸ் சமகால செயலாளர்
நாயகமாவார்.
1955ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் திகதி இலங்கை ஐநா அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டது.
0 comments:
Post a Comment