ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்:
மீண்டும் பிரதமராகிறார் ஷின்சோ அபே
ஜப்பானில் நடைபெற்ற பாராளூமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி, 312 இடங்களை பெற்று ஆட்சியை அமைக்கிறது.
வடகொரியா மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, வடகொரியாவுக்கு எதிரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு வெறும் எட்டு சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். யாரை ஆதரிப்பது? என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என சுமார் 20 சதவீதம் பேர் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, மக்கள் செல்வாக்கு உள்ளபோதே பாராளுமன்ற தேர்தலை நடத்தி மீண்டும் பிரதமராக தீர்மானித்துள்ள ஷின்சோ அபே கடந்த மாதம் 28-ம் திகதி பாராளுமன்றத்தை (பிரதிநிதிகள் சபை) கலைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 465 இடங்களில் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஜப்பானின் பல பகுதிகளில் லேன் சூறாவளி வீசி வரும் நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில், மொத்தமுள்ள 465 இடங்களில் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி 312 இடங்களை பெற்றது.
மூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளது என்பதால் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. ஷின்சோ அபே மீண்டும் பிரதமராவது உறுதி என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment