இடைக்கால அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்
– கோட்டே கல்யாணி காரக சங்க சபா முடிவு
இப்போதைய
சூழலுக்குப் புதிய அரசியலமைப்பு பொருத்தமில்லை என்பதால்,
வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை
தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று
கோட்டே, சிறி
கல்யாணி சமக்ரி
தர்ம மகாசங்க
சபாவின், கல்யாணி
காரக சபா
ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
கோட்டே,
சிறி கல்யாணி
சமக்ரி தர்ம
மகாசங்க சபாவின்
அனுநாயக்க தேரரான,
பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர், கொழும்பில்
நேற்று நடத்திய
செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“புதிய
அரசியலமைப்பு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
அரசிலமைப்பில் திருத்தங்கள் தேவைப்பட்டால்
அதனைப் பின்னர்,
செய்து கொள்ள
முடியும்.
புதிய
அரசியலமைப்பு தொடர்பாக காரக சங்க சபாவில்,
இரண்டு மணி
நேரம் விவாதிக்கப்பட்டது.
கோட்டே
கல்யாணி காரக
சங்க சபா
கூட்டத்தில், கோட்டே சிறி கல்யாணி சமக்ரி
தர்ம மகாசங்க
சபாவின் மகாநாயக்கரான,
இட்டபனே தம்மாலங்கார
தேரர் கலந்து
கொள்ளவில்லை. அவர் நேற்றுமுன்தினம் இரவு வெளிநாடு
சென்றதால் இதில்
பங்கேற்கவில்லை.
எனினும்,
மகாநாயக்கரின் ஆசியுடனேயே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
காரக சங்க
சபாவில் எடுக்கப்பட்ட
முடிவை அவர்
அங்கீகரிப்பார். இந்த விடயம் தொடரபாக விரைவில்
கூட்டு அறிக்கை
ஒன்று வெளியிடப்படும்.
வெளியிடப்பட்டுள்ளது
வெறும் பரிந்துரைகள்
மட்டுமே என்று ஜனாதிபதியும், பிரதமரும் கூறியுள்ளனர்.
இது
ஒரு வரைவோ
அல்லது சட்டமூலமோ
அல்ல என்பது
எமக்குத் தெரியும்.
எனினும் புதிய
அரசியலமைப்பு இதனை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படவுள்ளது.
புதிய
அரசியலமைப்பை வரைவதற்கு முன்னர் எமது நிலைப்பாட்டை
வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அது
இந்த விடயத்தில்
தொடர்புபட்டுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்”
என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment