இலங்கை வான்பரப்பில் இன்று தோன்றவுள்ள அதிசயம்!
இலங்கையின் வான்பரப்பில் இன்று இரவு வழமைக்கு மாறான நிகழ்வுகள்
இடம்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் விண்கல் மழையை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (22) இரவு முதல் நாளை அதிகாலை வரை இந்த மழை அவ்வப்போது இலங்கையின் பல பகுதிகளில் பொழியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றித் தகவல் தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன, இரவிலும் பொழியக்கூடிய இந்த விண்கல் மழை மிக அரிதானதொன்று எனவும், இந்த நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே, ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 20 முதல் 23ஆம் திகதி வரை ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் சுமார் இருபது விண்கல் வரை பூமியில் பொழிகின்றன. எனினும், அவை பூமியை அடைவதற்குள் எரிந்து சாம்பராகிவிடுவதால் பெரும்பாலான சமயங்களில் அவற்றைக் கண்களால் காண முடிவதில்லை.
இரவுப் பொழுதுகளும், விடியலுக்கு முன்னான பொழுதுகளும் அவற்றைக் காண்பதற்கு உகந்த நேரமாகும். இம்முறை பொழியவிருக்கும் விண்கல் மழையை இலங்கையின் வட மற்றும் தென் பகுதி மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது
0 comments:
Post a Comment