வவுனியா மாவட்ட உத்தியோகபூர்வ பணி
ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டம்
வவுனியா மாவட்ட உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டலுவல் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.பி.நாவின்ன, ரிஷாட் பதுர்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், ஏ.எம்.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment