இளம் பெண்ணுக்கு வியர்வையாகப்
பெருக்கெடுக்கும் ‘இரத்தம்’!
இத்தாலியில், ‘இரத்த வியர்வை’ பெருக்கெடுக்கும் நோயால் அவதிப்படும் 21 வயதுப் பெண்ணின் நிலை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மூன்று வருடங்களாக இந்த வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட பெண், அண்மைக்காலமாக அளவுக்கதிகமாக இரத்தம் வியர்வையாக வெளியேறியதையடுத்தே மருத்துவர்களை நாடியுள்ளார்.
தூங்கும்போதும்,
கடினமான வேலைகள் செய்யும்போதும் இப்பெண்ணுக்கு முகத்தில் இருந்தும் கைகளில் இருந்தும் இரத்தம் வியர்வையாகப் பெருக்கெடுக்கிறது. எனினும் இதற்கு சாத்தியமே இல்லை என்று உறுதியாக நம்பிய மருத்துவர்கள் சிலர், அப்பெண்ணின் தந்திர வேலையாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், அப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், உண்மையில் அவருக்கு வியர்வையாக இரத்தம் பெருக்கெடுப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போதும் அதிகளவு இரத்தம் வெளியேறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன சிகிச்சையை வழங்குவது என்று தெரியாமல் தயங்கி நிற்கும் வைத்தியர்கள், இரத்த அழுத்தத்துக்காக வழங்கப்படும் மருந்துகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்ததன் பின் இரத்தம் வெளியேறுவது குறைந்திருப்பதாக அப்பெண் கூறியுள்ளார். எனினும், இரத்தம் வெளியேறுவது முழுமையாக இன்னும் நின்றுவிடவில்லை.
0 comments:
Post a Comment