பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு
அரசதலைவர்களுக்கான பாதுகாப்பு
பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி கலந்து கொள்ளவுள்ளது.
இந்த தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை அணியினருடன் தானும் செல்லவிருப்பதாக விளையாட்டு துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதில் மாறுப்பட்ட கருத்துக்கள் இடம்பெறுவது தொடர்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இம் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டி லாகூரில் நடைபெவுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி மூன்றாம் போட்டி இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது அச்சுறுத்தல் அனுபவங்களை இலங்கை வீரர்கள் அங்குசெல்ல விரும்பவில்லை என குறிப்பிட்ட அமைச்சர், சர்வதேச கிரிக்கெட் பேரவை பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இவ் கிரிக்கெட் போட்டி குறித்த பாதுகாப்பு அடிப்படையிலேயே நாங்கள் இவர்களை அனுப்ப தீர்மானித்தோம் என்று குறிப்பிட்டார்.
அது மட்டுமன்றி யுத்த கால பகுதியில் பாகிஸ்தான் பாரிய ஒத்துழைப்பை வழங்கியது.
இலங்கையில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் பாகிஸ்தான் தமது கிரிக்கெட் வீரர்களை இலங்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக உதவியது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடிப்படையிலேயே இலங்கை கிரிகெட் வீரர்களை அங்கு போட்டியில் விளையாட அனுமதித்தோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசின் அழுத்தத்தின் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டதாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு , அவ்வாறான அழுத்தங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என விளையாட்டு துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அரச தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment