சமூகத்திற்கிடையே நல்லிணக்கம்

பேணப்படுவது அவசியம்

-    றிப்கான் பதியுதீன்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோவில் சிலைகள் இனம்தெரிய நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது.

உடைக்கப்பட்ட வணக்கஸ்தலத்தை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பிரத்தியோகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்கள்  பார்வையிட்டதோடு தினமும் கோவில் புனர்நிர்மான வேலைகளினையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்

இதன்போது வருகைதந்திருந்த கிராமவாசிகளிடம் கருத்து தெரிவித்த றிப்கான்  பதியுதீன் அவர்கள் " சிறுபான்மை மக்கள் என்ற வகையில் நாங்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ்த்து வருகின்றோம் அந்தவகையில் நாம் நமது மதத்தினை எவ்வாறு  மதிக்கின்றோமோ நமது வணக்கஸ்தலங்களை எவ்வாறு மதிக்கின்றோமோ அதே போன்று மற்றைய மதங்களையும் மதிக்க வேண்டும் இதைத்தான் எங்களுடைய வேதநூலாகிய குர்ஆனில் கூறப்பட்டுள்ளது இவ்வாறான செயல்கள் மனதிற்கு எவ்வாறான வலியினை  தரும் என்பது நாங்கள் நன்கு உணர்ந்திருக்கின்றோம் பெரும்பான்மை சமூகத்தினால் பல பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டு முஸ்லீம் சமூகத்திற்கு அநீதிகள் இழைத்த பொழுது நாங்கள் அழுது  துஆ பிரார்த்தனை செய்திருக்கின்றோம் எனவே யாரும் யாருடைய மதத்தினையும் இழிவு படுத்த வேண்டாம் இவ்வாறான கீழ்த்தரமான வேளைகளில் தயவு செய்து எவரும் ஈடுபடக்கூடாது எந்த மாதமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் உதவியாகவும் நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும் ஏனென்றால் எமக்குள்ளே நாங்கள் சண்டையிடுவதும் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதும் எம்மை அளிக்க காத்திருக்கும் மற்றவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிடும் எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதேபோன்று இந்த தவறினை செய்தவர்களை சட்டம் விரைவில் தண்டிக்க வேண்டும்" எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

​A.R.A.Raheem


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top