பிரதேச அரசியல்வாதிகளே!

எமது ஆசிரியர் வளங்கள் வெளி மாகாணங்களுக்கு

அதிகாரத்தில் இருந்தும்  மாகாண ஆசிரியர்களின்

கண்ணீரைத்  துடைக்க முடியாத நிலை ஏன்?



இன்று  கல்வியியல கல்லூரிகளில் கற்ற எமது கிழக்கு  ஆசிரிய ஆசிரியைகள்  இலங்கையில்  தூரப் பகுதிகளில் உள்ள  குக்கிராமங்களுக்கெல்லாம் நியமிக்கப்பட்டு  தம் சோகத்தை யாரிடம்  சொல்லி தீர்வு  தேடுவது என்பது  தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர்.
எப்படியாவது ஒரு ஆசிரியை ஆக வேண்டும் அதன் மூலம்  தன்  தாய்  தந்தையரைப்  நன்றாக பார்த்துக்  கொள்ள வேண்டும் என்றெல்லாம்  கனவு  கண்டு  கொண்டிருந்த கிழக்கு  மாகாணத்தின்  ஆசிரியைகள் பலர் தமக்கு கிடைத்த நியமனக் கடிதத்தைக் கண்டதும் இடி விழுந்தது  போல உடைந்தே போயினர்,
அரசாங்க நியமனம் என்பது எமக்கு பாரிய மகிழ்ச்சியைத் தரக் கூடியது தான் ஆனால் அதுவே இடி விழுந்தது  போல் கொடூரமாக எமது  ஆசிரியர்களுக்கு தெரிவதற்கு ஏராளமாக காரணங்கள் உள்ளன,
ஆசிரிய கலாசாலையில் கற்ற ஆசிரியைகள்  தமது பெற்றோரை  பிரிந்து நீண்ட தூரப் பகுதிகளுக்கு  சென்று  கஷ்டப்பட்டு  மீண்டும் தூரப் பிரதேசங்களுக்கு  நியமனம்  வழங்கப்படும்  போது அவர்களின்  வேதனை அவர்களுக்கும்  அல்லாஹாவுக்கும் தான் தெரியும்,
தமது  குடும்ப வறுமையைப் போக்க கல்வி ஒன்றே வழியென எண்ணி கற்ற பெண்பிள்ளைகள் தொடர்ந்தும் வரும்  சோதனைகளால் மனமுடைந்து விரக்தியுற்று தமக்கு தொழிலே  வேண்டாம் கூலி  வேலை  செய்கின்றோம் என்று எண்ணும் நிலை.
அப்பாடா தொழில் கிடைத்து விட்டது இனியாவது  திருமணம் செய்யலாம் எனக் காத்திருந்தவர்களுக்கு இடமாற்றமுமில்லை திருமணமுமில்லை,
எமது  கிழக்கில் எத்தனையோ பாடசாலைகளில் ஆசிரியர்  பற்றாக்குறை உள்ள நிலையில் எமது  ஆசிரியர்களை  வேளிமாகாணங்களுக்கு அனுப்புவதை  தடை  செய்வதற்கு இயலாமல் எமது  அரசியல் தலைமைகள் உள்ளமை நாம்  வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது,
எமது  மாகாணத்தின் பல  பாடசாலைகள் வருடந்தோறும்  ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு  சின்னஞ்சிறு  குழந்தைகள் முதல்வயது முதிர்ந்தவர்கள்  பதாகைகளை ஏந்திய வண்ணம்  வீதிகளில்  ஆர்ப்பாட்டம்  செய்வதெல்லாம்  உங்கள்  கண்களுக்கு தெரியவில்லையா?????????
இலங்கையின்  கல்வியில்  பின்தங்கிய மாகாணம் கிழக்கு மாகாணமே அதற்கு பிரதான காரணம்  ஆசிரியர் வளப் பற்றாக்குறை என்பது  தெரிந்திருந்தும்  எமது  மாகாணத்தில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் எமது  ஆசிரியர்கள் எமது மாகாணத்தில் தக்க வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை??????
.நீங்கள் மத்தியரசில் இருக்கின்றீர்கள்,மத்தியரசு தான் இந்த நியமனங்களை  வழங்கியுள்ளது,அவ்வாறானால்  பிரதியமைச்சர் அமீர் அலி ,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினர்  மௌலானா மற்றும் வியாழேந்திரன் அவர்களே  மத்தியரசில் அங்கம் வகிக்கும் உங்களால்  இது  தொடர்பில்  நடவடிக்கை எடுக்க முடியவில்லையா????
அதிகாரத்தில் இருந்தும்  மாகாண ஆசிரியர்களின் கண்ணீரைத்  துடைக்க முடியாத நிலை ஏன்?

LATHEEF MUJAHIDEEN

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top