இணைக்கும்
போது மெளனித்திருந்த மக்கள்
இன்று
ஏன் போர்க்கொடி தூக்கியுள்ளனர்?
அன்று அரசாங்கத்தின் நியதிப்படி அதாவது அன்று கல்முனையில்
ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவு (பிரதேச செயலகம்) மாத்திரம் இயங்கி வந்ததினால்
இயலுமானவரை ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் ஒரு சபையாக அமைக்கப்படல் வேண்டும் என்ற கட்டாயத்தின்
( நியதியின்) அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்டது. அதனை அன்று மூன்று சபைகளிலும்
இருந்த நற்பிட்டிமுனை (கரைவாகு மேற்கு கிராம சபை) மக்களும் எதிர்க்கவில்லை,
மருதமுனை (கரைவாகு வடக்கு
கிராம சபை) மக்களும் எதிர்க்கவில்லை. அது போன்றுதான் சாய்ந்தமருது (கரைவாகு தெற்கு
கிராம சபை) மக்களும் எதிர்க்காமல் மெளனமாக இருந்தார்கள்.
அன்று சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம்
உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இன்று சாய்ந்தமருதுக்கு தனியான் பிரதேச செயலகம்
உள்ளது. அது மாத்திரல்லாமல் சாய்ந்தமருதில் 5 ஜும்ஆப் பள்ளிவாசல்கள், 23
பள்ளிவாசல்கள், ஒரு ஹிப்ளு மத்ரஸா, ஒரு அரபுக் கல்டரி, ஒரு தேசிய பாடசாலை உட்பட 8
அரச பாடசாலைகள், தனியான கோட்டக்கல்வி அலுவலகம், மக்கள் வங்கி, இலங்கை
வங்கி,ப.நோ.கூ.சங்கம், ஒரு தபால் நிலயம் உட்பட 3 உப தபால் நிலயங்கள், பொது நூலகம்,
மாவட்ட வைத்தியசாலை, கமநல சேவைகள் நிலையம் போன்ற இன்னும்பல நிறுவங்களின் கிளைகளும்,
பல பொது அமைப்புக்களும் கொண்டதாக இவ்வூர் உள்ளது.
அன்று மெளனமாக
இருந்தவர்கள் இன்று கல்முனை மாநகர சபையில் வாழ்கின்ற போது ஒரு சபை செய்ய வேண்டிய
சேவைகளை நிறைவாகச் செய்ய முடியாத இயலாமையை நற்பிட்டிமுனை, மருதமுனை , சாய்ந்தமருது மக்கள் தற்போது அனுபவித்துக்
கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக கூடிய சனத் தொகை உள்ள சாய்ந்தமருது மக்கள்
இப்பிரச்சினையைக் கூடுதலாக அனுபவிக்கின்றார்கள். இந்த நிலையில் இருந்து விடுபடவே
தனியான பிரதேச செயலகத்தைக் கொண்டுள்ள சாய்ந்தமருது மக்கள் தனி நிர்வாகம் கேட்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள்.
அதுமாத்திரமல்ல இச்சபைக்கு தெரிவான இந்த ஊர் மக்கள்
பிரதிநிதிகள் சபைக்குள் தாக்கப்பட்ட கவலையான சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதையும்
நினைவுபடுத்துகின்றார்கள்.
இந்நிலையில்,சாய்ந்தமருது பிரதேசத்திற்கென்று தனியான
உள்ளூராட்சி சபை வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை எங்களது வெறும் கோஷம் அல்ல.
அது உயிரோட்டம் நிறைந்த ஒன்றுதான் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சாய்ந்தமருது மக்கள் கூறுகின்றார்கள்.
0 comments:
Post a Comment