இப்படியும் நடக்கிறது!

மர்ஹூம் அஷ்ரப் பிறந்த நாளில்

நஸீரிடம் தேசியப்பட்டியல் கேட்கும் மு.கா  ஆதரவாளர்கள்

அவரின் வீடு முற்றுகையிடப்பட்டதாகவும் செய்தி!!



அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரின் வீட்டை இன்று (23) காலை முற்றுகையிட்டனர் என அறிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது, அட்டாளைச்சேனை பிரதேச மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு முற்றுகையிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் ஏ.எல்.முஹம்மட் நஸீர்,

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் அது எமக்குக் கிடைக்கும். அதற்கான காலம் கனிந்துவிட்டது. இச்சந்தர்ப்பத்தில்தான் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். பொறுமைக்குப் பின்னால்தான் எமக்கு வெற்றியுள்ளதுஎன்றார்.

நீங்கள் என்னுடன் வைத்திருக்கும் பற்றைத் தலைவர் மீதும் வைக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையான கட்சிப் போராளிகளாவீர்கள். எனக்குக் கட்சி என்றால் அது முஸ்லிம் காங்கிரஸ்தான். கட்சியிலும் தலைவரிலும் நான் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளேன். அதேபோல் தலைமையும் என்மீது நம்பிக்கை தந்துள்ளதுஎன்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top