. மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்களில் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
. மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
. கல்லடி பாலத்திற்கு அருகில் புதிய டச்பார் வீதியில் உள்ள நபர் ஒருவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
. நேற்று மாலை வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகம் அப்படியே கொள்ளையிட்டு செல்லப்பட்டிருந்து.
. சுமார் 68 இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம் பாதுகாப்பு பெட்டியுடன் கொள்ளையிடப்பட்டிருந்தது.
. இந்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் நகை தொழில் செய்யும் நான்கு இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையினை தொடர்ந்து குறித்த நகைப்பெட்டகம் திருகோணமலை - திரியாய காட்டுப்பகுதியில் புதைத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் நகைப்பெட்டகத்தை மீட்டு வந்ததுடன், பொலிஸாரினால் நகைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.
. கடந்த மூன்று மாதங்களாக குறித்த வீட்டில் இருந்து திட்டங்களை தீட்டியில் இளைஞர்கள் இந்த கொள்ளை முயற்சினை மேற்கொண்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
. கடந்த மூன்று தினங்களாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நான்கு இளைஞர்கள் மட்டுமே இருந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு குறித்த நகைப்பெட்டகம் கொள்ளையடித்து செல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கல்லடி கடற்கரையில் புதைத்திருந்த நிலையில், மீண்டும் அவற்றினை எடுத்துகொண்டு திருகோணமலை திரியாய காட்டுப்பகுதியில் புதைத்துவைத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
. கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் நாளை நீதிவான் முன்பாக ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment