. மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டு எதிரணியினர் இன்று அம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
. இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
. இதனை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஸ, டி.வி.உபுல், அருந்திக பெர்னான்டோ, குமார் வெல்கம, மகிந்தானந்த அழுத்கமகே, சமல் ராஜபக்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
. இந்திய துணைத் தூதரகம் முன்பாக, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டும், விரட்டியடித்தனர்.
. இதன் போது மூன்று பொலிஸார் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
0 comments:
Post a Comment