சார்க்
நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும்
பாராளுமன்ற
உறுப்பினர்கள் அமைப்பின் எட்டாவது மாநாடு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் அமைப்பின் எட்டாவது மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04)
முற்பகல் கொழும்பில்
ஆரம்பமானது.
'சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்களின் அமைப்பு, பேண்தகு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைந்துகொள்வதற்கு தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்
இணைந்து செயற்படுவதற்கான மன்றம்' என்ற கருப்பொருளின் கீழ் இன்று ஆரம்பமாகும் மாநாடு எதிர்வரும் 06ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும்.
பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்து இம்முறை மாநாட்டில்
விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் கலாசார மற்றும் தொல்பொருள்
மரபுரிமைகளை பாதுகாப்பதில் சார்க் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம்
தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
சார்க் அமைப்பு நாடுகளின் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்களின் அமைப்பு தெற்காசிய மக்கள் மத்தியில் நட்புறவையும்
புரிந்துணர்வையும் மேம்படுத்தல், சார்க் அமைப்பு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கும் பாராளுமன்ற
உறுப்பினர்களுக்குமிடையிலான தொடர்பை மேம்படுத்தல், பிராந்திய பாராளுமன்ற
முறைமை தொடர்பாக கருத்துக்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான மன்றம் ஒன்றை
உருவாக்கும் நோக்குடன் 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த 8வது மாநாடு பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பாக
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும்
ஒரு விரிந்த மன்றத்தை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் தலைமை உரையை பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தியதுடன், அங்குரார்ப்பண உரையை சபாநாயகர் கருஜயசூரிய நிகழ்த்தினார்.
சார்க் அமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் அமைப்பின் 8வது மாநாட்டை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.
0 comments:
Post a Comment