புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட வித்தியா மாணவியின்
தாயார் வீட்டுக்கு ஜனாதிபதி விஐயம்
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட வித்தியா மாணவியின் தாயார் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்தித்தார்.
நேற்று
(21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட 'உத்தியோகபூர்வ பணி' ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொணட் போதே ஜனாதிபதி இவரை சந்தித்தார்..
குடும்பத்தினரின் நலன்களைக் கண்டறிவதற்காக அவரது வீட்டிற்குச் செல்வதாக அவருக்கு வழங்கியிருந்த உறுதி மொழிக்கு அமைய வவுனியா பிரதேசத்pல் உள்ள இந்தத் தாயின் வீட்டிற்கு ஜனாதிபதி நேற்று விஐயம் செய்தார். குடும்பத்தினரின் நலன்களை கேட்டறிந்தார். மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்கும் அவரது பாடசாலை நடவடிக்கைகளுக்கும் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியமை, நீதியை நிலைநாட்டுவதில் ஜனாதிபதி காட்டிய அக்கறை தொடர்பில் இந்த மாணவியின் தாய் ஜனாதிபதிக்கு இதன் போது தனது நன்றியைத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment