அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில்
புதிதாக 5 ஆயிரம் பேர்
நியமனக் கடிதங்கள் திங்கட்கழமை வழங்கப்படும்


அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கழமை காலை வழங்கப்படவுள்ளது. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டராவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவோர் மாவட்ட மட்டத்தில் இரண்டு வார பயிற்சி வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று திருமதி கமகே தெரிவித்துள்ளார்.
இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதன் மூலம் கடந்த வருடத்தில் ஜனவரி 30ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் முழுமைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top