இன்று நள்ளிரவு முதல்
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
எரிபொருட்களின்
விலை இன்று
நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்படுகின்றது. இருப்பினும்
கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி பயனாளிகள் பெருந்தோட்டத்துறை மக்கள் உள்ளிட்டோருக்கு நிவாரண விலையின்
அடிப்படையில் மண்ணெண்ணையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக
சுகாதார போசாக்கு
மற்றும் சுதேச
வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன
தெரிவித்துள்ளார்.
இன்று
நள்ளிரவு முதல்
ஹொக்ரெயின் 92 ரக பெற்றோல் 137 ரூபாவாகவும் , 95 ஹொக்ரெயின் ரக பெற்றோல் 148 ரூபாவாகவும்
, ஓட்டோ டீசல்
109 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும், மண்ணெண்ணை
101 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் அமைச்சர்
தெரிவித்துள்ளார்
இருப்பினும்
மண்ணெண்ணை 1 லீற்றர் 44 ரூபாவிற்கு கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி பயனாளிகள் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி
பயனாளிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் இதற்கான
நிவாரண அட்டை
விநியோகிக்கப்படுவதுபோன்று பெருந்தோட்டதுறையினருக்கும் இந்த வகையில்
அட்டை விநியோகிக்கப்படும்
என்று அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment