ஊடகவியலாளர்களின்
சுதந்திரம் பாதுகாக்கப்படும்
Add caption |
ஊடகவியலாளர்களின்
சுதந்திரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு
வருகின்றது.
ஊடகவியலாளர்களுக்கு
ஏதாவது பிரச்சனை
ஏற்படுமாயின் அது தொடர்பில் அரசாங்க தகவல்
திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராக
இருப்பதாக அரசாங்க
தகவல் திணைக்களத்தின்
பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன
தெரிவித்துள்ளார்.
அரசாங்க
தகவல் திணைக்களத்தில்
இன்று நடைபெற்ற
அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பணிப்பாளர் நாயகம்
இந்த விடயத்தை
குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி
செய்தியாளர் அஷாம் அமீன் தொடர்பில் CID குற்றப்புலனாய்வு
மேற்கொள்ளவிருந்த விசாரணை தொடர்பாக செய்தியாளர் ஒருவர்
கேட்ட கேள்விக்கு
பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின்
டூவிட்டர் பக்கத்தில்
வெளியாகியிருந்த செய்தியை மீள்பிரசுரம் செய்தது தொடர்பிலேயே
பிபிசி செய்தியாளர்
அமீன் குறித்து
குற்றபுலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அது
தற்போது விலக்கி
கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த பிரச்சனை
முடிவுக்கு வந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய பணிப்பாளர்
நாயகம், ஜனாதிபதி
டூவிட்டர் பக்கத்தில்
வெளியான அந்த
செய்தி தொடர்பில்
குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின்
டூவிட்டர் பக்கத்தில்
குறித்த விடயம்
எவ்வாறு வெளியானது
என்று விசாரணை
நடத்தப்படுகின்றது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவும்
இதை வெளியிடவில்லை
என்று தெரிவித்துள்ளது.
இணைத்தள சைபர்
பயங்கரவாத தாக்குதலே
இதற்கு காரணமாக
இருக்கலாம் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment