ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பேன்
- மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவிப்பு
ஒன்று
அல்லது இரண்டு
ஆண்டு காலம்
மட்டுமே பதவியில்
நீடிப்பேன் என மிக சமீபத்தில் மலேசியா
பிரதமராக பொறுப்பேற்ற
மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
கடந்த
வாரம் நடைபெற்ற
மலேசிய பாராளுமன்ற
தேர்தலில் யாரும்
எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி
பெற்று ஆட்சியைக்
கைப்பற்றியது. 92 வயது நிரம்பிய மஹாதிர் முஹம்மது மலேசியாவின்
பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இதன்முலம், உலகிலேயே மிகவும் வயதான பிரதமர்
என்ற பெருமையை
அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில்,
வால் ஸ்ட்ரீட்
ஜர்னல் பத்திரிக்கை
டோக்கியோவில் நடத்தும் கருத்தரங்கு ஒன்றில் பேசிய
மஹாதிர் முஹம்மது, இன்னும்
ஒன்று அல்லது
இரண்டு ஆண்டு
காலம் மட்டுமே
மலேசிய பிரதமராக
பதவி வகிப்பேன்.
பிரதமர் பதவியை
விட்டு கீழே
இறங்கினாலும், மலேசிய அரசின் பின்னல் இருந்து
முக்கிய பங்காற்றுவேன்
என தெரிவித்துள்ளார்.
மேலும்,
தான் பிரதமராக
தொடர்ந்தாலும், விரைவில் சிறையிலிருந்து வெளிவர உள்ள
அன்வர் இப்றாஹிம் கூட்டணி
கட்சிகளின் தலைவராக தொடர்வார் என அவர்
தெரிவித்துள்ளார். தனது தேர்தல்
பிரசாரத்தின் போது, அன்வர் இப்றாஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு
பிரதமராக்கப்படுவார் என மஹாதிர்
கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்வர்
இப்றாஹிமின்
மனைவி தற்போது
மலேசியா துணை
பிரதமராக உள்ளார்
என்பதும் நினைவு
கூறத்தக்கது.
0 comments:
Post a Comment