ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்  மே தினக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி மாவடிவேம்பு பகுதியில் இன்று 7 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இங்கு உரைநிகழ்த்திய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,
2020 ஆண்டுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற போவது இல்லை" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கான ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு, கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான, மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி - மாவடி வேம்பில் நடைபெறுகின்றது
'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய  ஜனாதிபதி "சிலர் தம்மிடம் 2020இல் ஓய்வுபெற போகிறீர்களா? எனக் கேட்பதாகவும், சில ஊடகங்களும் 2020இல் தாம் ஓய்வு பெறபோவதாக செய்திகளை வெளியிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனினும் 2020இல் தாம் ஓய்வுபெற போவது இல்லை எனவும், நாட்டுக்கு ஆற்றவேண்டிய பணிகள் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Sri Lanka Freedom Party May Day Rally themed 'Labour Power for National Harmony' from Chenkalady, Mawadiwembu in Batticaloa under the patronage of President (07) today














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top