2019 நின்ஜா 1000
இந்தியாவில் வெளியானது
கவாசகி நிறுவனத்தின் 2019 நின்ஜா 1000 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியானது.
கவாசகி நிறுவனம் 2019 நின்ஜா 1000 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய நின்ஜா தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளித்தாலும், புதிய டீக்கல்கள் மற்றும் சிறிய கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய மாடலின் விலையே புதிய மாடலிலும் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படாதது தெரியவந்துள்ளது. பூனே அருகில் இருக்கும் கவாசகியின் சக்கன் தயாரிப்பு ஆலையில் புதிய நின்ஜா 1000 மோட்டார்சைக்கிள் கட்டமைக்கப்படுகிறது.
புதிய மோட்டார்சைக்கிளில் 1043சிசி இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 141.9 பிஎஸ் @10000 ஆர்பிஎம் மற்றும் 111என்எம் டார்கியூ @7300 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் புதிய மாடலில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், ஏபிஎஸ் மற்று் 3-லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
கறுப்பு மற்றும் பச்சை என இரண்டு நிறங்ககளில் கிடைக்கும் 2019 கவாசகி நின்ஜா 1000 முன்பதிவு இந்தியா முழுக்க தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில்
2019 கவாசகி நின்ஜா 1000 விலை இந்திய ரூபாவில் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.