ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை
பொதுபல
சேனா அமைப்பின்
பொதுச்செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, 6 மாதங்கள்
ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழியச் சிறைத் தண்டனை
விதித்து, ஹோமாகம நீதவான்
நீதிமன்றம் சற்று நேரத்துக்கு முன்னர் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
ஊடகவியலாளர்
பிரகீத் எக்னலிகொடவின்
மனைவியை அச்சுறுத்திய
சம்பவம் தொடர்பான
வழக்கில் குற்றவாளியாக
இனங்காணப்பட்ட, ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதவான்
நீதிமன்றம் இன்று (14) இவ்வுத்தரவை வழங்கியது.
ஊடகவியலாளர்
பிரகீத் எக்னலிகொட
கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில், இடம்பெற்ற
வழக்கில், விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள 09 இராணுவ புலனாய்பு
அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில்
வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதவானாக கடமையாற்றிய
ரங்க திஸநாயக்க
உத்தரவிட்டார். இதனையடுத்து, திறந்த நீதிமன்றில் சந்த்யா
எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இது
தொடர்பான வழக்கின்
தீர்ப்பை ஹோமாகம
நீதவான் உதேஷ்
ரணதுங்க இன்று
(14) வழங்கியிருந்தார்.
ஒரு
வருட கடூழிய
சிறைத்தண்டனை விதித்த நீதவான், அதனை 06 மாதத்தில்
அமுல்படுத்துமாறு உத்தரவிட்டார். அத்துடன் குறித்த விடயம்
தொடர்பில் ரூபா
1,500 அபராதத் தொகையையும் விதித்தார்.
தீர்ப்பு:
குற்றவியல்
சட்டத்தின் இலக்கம் 386 மற்றும் 486 ஆகிய பிரிவின்
கீழ், குற்றமிழைத்தல்
மற்றும் அச்சுறுத்தல்
ஆகிய இரு
வேறு குற்றங்களுக்கும்
தலா ரூபா
1,500 வீதம் ரூபா 3,000 அபராதம் இதன்போது விதிக்கப்பட்டது.
அத்துடன்,
பாதிக்கப்பட்ட சந்த்யா எக்னலிகொடவுக்கு ரூபா 50,000 இழப்பீடு
வழங்கமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார். அதனை
செலுத்த தவறின்,
அதனையும் அபராதமாக
அறவிடுமாறும் உத்தரவிட்டார். குறித்த பணத்தை எவ்வழியிலேனும்
செலுத்தத் தவறுமிடத்தில்,
மேலும் 03 மாத
கால சாதாரண
சிறை தண்டனைக்குள்ளாக்கப்படும்
என நீதவான்
இதன்போது தெரிவித்தார்.
குறித்த
தீர்ப்பை அறிவித்தவுடன்,
பிரதிவாதி கூண்டில்
நிறுத்தப்பட்டிருந்த ஞானசார தேரர்,
தான் அறிவித்தலொன்றை
விடுக்க வாய்ப்பு
அவசியம் என
தெரிவித்து, "நீதிமன்றம் மாத்திரம்தான்
இருக்க வேண்டும்?"
என கூறினார்.
அவ்வாறான
அறிவித்தலை விடுப்பதற்கு அனுமதி வழங்க முடியாது
என தெரிவித்த
நீதவான், வேண்டுமானால்
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம் என
அறிவித்தார்.
இதனையடுத்து,
ஞானசார தேரர்
சிறைச்சாலை பஸ்ஸை நோக்கி அழைத்துச் செல்லும்
சந்தர்ப்பத்தில், அதற்கு அருகில் பொதுபல சேனா
அமைப்பின் உறுப்பினர்கள்
உள்ளிட்ட பிக்குகள்
குழுவொன்று அங்கு குழுமியிருந்ததோடு, அவர்கள் சற்று
அமைதியற்ற வகையில்
நடந்துகொள்ள முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த
2016 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த
சம்பவத்தின்போது, சந்த்யா எக்னலிகொடவை திட்டிய ஞானசார
தேரர் தொடர்பில்,
எக்னலிகொட சார்பில்
ஆஜரான வழக்கறிஞர்களால்
நீதவானிடம் முறையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த
வேளையில், நீதிமன்றத்தை
அவமதித்ததாகத் தெரிவித்து ஹோமகம நீதவான் ரங்க
திஸாநாயக்க ஞானசாரவை கைது செய்வதற்கான பிடியாணையையும்
வழங்கியிருந்தார்.
குறித்த
சம்பவம் தொடர்பான
வழக்கு கடந்த
கடந்த மே
24 ஆம் திகதி,
ஹோமாகம நீதவான்
நீதிமன்றில், நீதவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில்
எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் உதேஷ்
ரணதுங்க ஞானசார
தேரர், குற்றவாளி
என உறுதிப்படுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment