அஷ்ரஃப்  ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில்
அடிக்கல் நாட்டு விழா
இரு பிரதி அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்கள்
"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிப்போம்''



"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிப்போம்'' என்று மேடைகளில் முஸ்லிம் மக்களிடம் பேசிய முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இரு பிரதி அமைச்சர்கள் நான்தான் இல்லை நானேதான் என்று தங்கள் முகநூலில் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அழைக்கப்பட்டிருக்கிறார் என ஒரு பிரதி அமைச்சரும்
அடிக்கல் நடும் நிகழ்விற்கு பிரதியமைச்சர் பைசால்காசீம் அவர்களது அழைப்பின்பேரில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அழைக்கப்பட்டிருக்கிறார் என மற்றொரு பிரதி அமைச்சரும் மக்களுக்கு சொல்கின்றார்கள்.
அதுமாத்திரமல்ல அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் 2000மில்லியன் ரூபா செலவில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா என்று ஒரு பிரதி அமைச்சர் சொல்லுகின்றார்.
மற்றைய பிரதி அமைச்சர் ரூபா 1449 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த அவசரசிகிச்சைப்பிரிவானது பைசால் காசீம் பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் எடுத்த பிரயத்தனங்களின் பலனாக இன்று எம் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. என்றும் கூறுகின்றார்.
எல்லாவத்திற்கும் மேலாக கல்முனைப் பிரதேசத்திற்கு பலவருடங்களுக்குப் பின் துறைசார் அமைச்சர் ஒருவர் விஜயம் செய்த நிலையில் இப்பிரதேச மக்களின் வாக்குப் பலத்தால் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து கொண்டிருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இப்பிரதேச மக்களின் அபிவிருத்தி தொடர்பான முக்கியமான இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தும் பிரதம அதிதியாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமக்கு அந்த இடத்தில் உரிய மாலையும் மரியாதையும் கிடைக்கமாட்டாது எனக் கருதியோ என்னவோ விஜயம் செய்திருக்கவில்லை என மக்கள் கூறுகின்றார்கள்.
"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிப்போம்'' மாலை மரியாதையை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளாகிய நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, எமது முஸ்லிம் சமூகம் கல்வியிலும் அபிவிருத்திகளிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் குறிக்கோள் எனக் கூறி தேர்தல் காலங்களில் மக்களிடம் ஒற்றுமையை வெளிப்படுத்தியவர்கள் இன்று அடிக்கல் நாட்டு விழாவில் நான்தான் இல்லை நானேதான் என்று படம் காட்டுகின்றார்கள்.
தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் காலடிகளில் வாரக் கணக்கில் மக்களோடு மக்களாக இருப்பவர்கள் இப்பிரதேச மக்களின் அபிவிருத்தி தொடர்பான முக்கியமான இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தும் துறைசார் அமைச்சர் கலந்து கொள்ளும் அந்த விழாவில் தமக்கு அந்த இடத்தில் உரிய மாலையும் மரியாதையும் கிடைக்கமாட்டாது எனக் கருதியதில்தான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இவ்விழாவுக்கு வருகைதராமல் தவிர்த்திருக்க வேண்டும் என விடயம் தெரிந்த மக்களால் அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சேவையை ஒழுங்கா செய்தல் வேண்டும், அது போல் அது மக்களுக்காக இருக்க வேண்டும் ஆனால் உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் எல்லோரும் படம் காட்டுகின்றார்கள் அடுத்த தடவை பாராளுமன்றம் போவதற்கு படம் போடுகின்றார்கள்.
உண்மையில் இச் சேவைக்கு யார் யார் முன்னின்று உழைத்தார்களோ அவர்களுக்கு அதற்கான கூலி கிடைத்தே தீரும். மக்களும் நன்றியுடயவர்களாக இருப்பார்கள்.
ஏ. எல் .ஜுனைதீன்

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா
*****************************************************************************
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் 2000மில்லியன் ரூபா செலவில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை 4 மணிக்கு குறித்த வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம், சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிம், தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்..எம். மன்சூர், .எல.எம். நசீர் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
- ஊடகப் பிரிவு


20 hrs · 
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய அவசரசிகிச்சப்பிரிவு ஒன்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வொன்றிற்கு பிரதியமைச்சர் பைசால்காசீம் அவர்களது அழைப்பின்பேரில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தன அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (17/06/2018) பிற்பகல் ஐந்துமணிக்கு கலந்துகொள்கின்றார்.
ரூபா 1449 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த அவசரசிகிச்சைப்பிரிவானது பைசால் காசீம்பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் எடுத்த பிரயத்தனங்களின் பலனாக இன்று எம் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
முழு தென்கிழக்கு பிராந்தியத்திற்குமான ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இவ்வசதியினை பெற்றுக்கொள்வதில் பிரதியமைச்சர் பல சவால்களை எதிர்நோக்கி தன்னந்தனியாக ஒவ்வொரு தடைகளையும் மிகவும் நுணுக்கமாக தாண்டிவந்ததன் பலனாகவே இந்த நான்கு மாடிகளைக்கொண்ட கட்டிடம் அமையப்பெறவுள்ளது.
பிரதியமைச்சர் பைசால் காசீம் தாம் பிரதியமைச்சுப்பதவியை பொறுப்பெடுத்த நாளில் இருந்து இப்பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் பல தூரநோக்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில் நிந்தவூரில் பிராந்தியத்துக்கான மகப்பேற்று மற்றும் சிறுவர் நல மருத்துவமனை ஒன்றினை நிறுவுதல்,பாலமுனை வைத்தியசாலையினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைத்து பிராந்தியத்துக்கான காது,மூக்கு,தொண்டை மற்றும் வாய் தாடை முகம் (ENT,OMF surgical Unit) போன்றவற்றிற்கான சத்திரசிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
இத்திட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் தமது சம்மதத்தினை எழுத்தும்,மூலம் வழங்கியுள்ளார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top