கட்டாய திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த
இளம்பெண் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் சம்பவம்
   
பாகிஸ்தானின் லாகூர் நகர் அருகே கட்டாய திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பைசாலாபாத் நகரில் தனியார் பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றி வந்தவர், மஹ்விஷ்(19). இளம்பெண்ணான இவர் தனது குடும்பத்தாரை பிரிந்து ஆஸ்டலில் தங்கியபடி வேலை செய்து வந்தார்.
அதே தனியார் பஸ் நிலையத்தில் காவலாளியாக வேலை செய்யும் உமர் டரஸ் என்பவர் மஹ்விஷ் மீது ஆசைப்பட்டு, அவரை ஒருதலையாக காதலித்தார். மஹ்விஷை திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தபோது நிராகரித்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உமர் டரஸ் வேலை முடிந்து ஆஸ்டலுக்கு திரும்பிய மஹ்விஷின் கையை பிடித்து இழுத்து பலவந்தபடுத்தினார். இதை எதிர்த்து போராடிய மஹ்விஷை துடிதுடிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற உமர் டரஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரமான படுகொலை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு பஞ்சாப் மாகாண காபந்து முதல்  அமைச்சர் டாக்டர் ஹஸன் அஸ்கரி ரிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top