சாய்ந்தமருது தோணாவின்
மற்றொரு பக்கத்தின் இன்றைய நிலை
சாய்ந்தமருது மக்களே!
சாய்ந்தமருதில் 3 கோடி ரூபா செலவில் தோணா அபிவிருத்தி என்றுகூறி ஏற்கனவே அங்குள்ள புல் பூண்டுகளை அகற்றினார்கள். அத்தோடு அங்கு அபிவிருத்தி வேலைகள் நின்றுவிட்டன. அந்தபெருந்தொகையான நிதி தோணாவுக்குள் அமிழ்ந்து போனதா அல்லது அதற்கு என்ன நடந்தது என்று இன்று வரையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் சாய்ந்தமருது
மக்களின் நலனுக்காக ஊரின் அபிவிருத்திக்கு என பெரும் தொகை நிதி இந்த நல்லாட்சி
அரசாங்கத்தின் அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டது.
சாய்ந்தமருது
மக்களுக்காக அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டுள்ள பெரும் தொகைப் பணமும் கடந்த காலத்தைப் போன்று அபிவிருத்திக்கு செலவிடாமல் செலவு
செய்ததாகக் கூறி வேறு இடங்களில்புதைந்து விடக்கூடாது.
சாய்ந்தமருது மக்களின் நலனுக்காக அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டுள்ள
16 கோடி 20 இலட்சம் ரூபா நிதி சரியாக பாவிக்கப்படல் வேண்டும். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சாய்ந்தமருது மக்கள் விழிப்பாகஇருந்து செயல்பட வேண்டியது அவசியத்திலும் அவசியமாக உள்ளது.
-----------------------------------------------------
சாய்ந்தமருதில் 16 கோடி 20 இலட்சம் ரூபா செலவில் அணைக்கட்டு!
அமைச்சரவை அனுமதி!!
------------------------------------------------------
சாய்ந்தமருது
பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களப்பினை சூழ அணைக்கட்டு அமைக்கப்படவிருக்கிறது.
இத்திட்டத்திற்கென 16 கோடி 20 இலட்சம் ரூபாவை செலவிட அமைச்சரவை அனுமதி
வழங்கியுள்ளது.
வெள்ளப்பெருக்கு
மற்றும் சூழல் பாதிப்புகளினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை
கவனத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்
திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்
ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இந்த அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த களப்பில் ஏற்படும்
வெள்ளப்பெருக்கினால் 2 700 குடும்பங்களில் 10ஆயிரத்திற்கும் அதிகமானோர்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
*************************************************************************
*************************************************************************
07. கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளப்பெருக்கு மற்றும் சூழல்பாதிப்புக்களை கட்டுப்படுத்தல் (விடய இல. 18)
==================================================================
கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும்கலப்பிலிருந்து நீர் நிரம்பி வடிவதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுபொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனை கருத்திற்கொண்டு குறித்த கலப்பின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும்வகையில் கலப்பினை அபிவிருத்தி செய்தல் மற்றும் கலப்பினை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும்நோக்கில் 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கலப்பினை சூழ அணைக்கட்டு ஒன்றினை அமைப்பதுதொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால்முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Control of floods and environmental pollution in
Sainthamaruthu Divisional Secretary's Division
Residents
in Sainthamaruthu Divisional Secretary's Division in Ampara District are
affected by the floods in the lagoon annually. Absence of proper drains, some
aquatic plants obstructing the flow of water, and waste disposal around the
lagoon by residents have caused this situation. Accordingly, the proposal made
by City Planning and Water Supply Minister Rauff Hakeem to construct a barrier
around the lagoon at an estimated cost of Rs. 162 million as a measure to these
issues benefiting more than 10,000 people of 2,700 families, was approved by
the Cabinet of Ministers.
0 comments:
Post a Comment